பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

149

டுக்கல் பகுதி பாளையக்காரர்களது தீவிரமான கிளர்ச்சி, 1801-ல் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக தொடுத்த போர். 1806 ல் வேலூர் கோட்டையில் கும்பெனித் தளபதிகளைக் கொாறு சிப்பாய்கள். கோட்டையை கைப்பற்றிய கிளர்ச்சி 1808 ல் ராமன் நாயரது வயநாட்டுக் கிளர்ச்சி, 1809 -ல் முருவாங்கூரில் தளவாய் வேலுத்தம்பியின் எதிர்ப்பு. 1857-ல் மாநிலங்களில் பரவிய சிப்பாய்களது சூறாவளிப் புரட்சி...

இவ்விதம் நீண்டு தொடர்ந்து, வெள்ளையருக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த இயக்கங்கள், புரட்சிகள், இவையனைத்தும் மாறவர் சீமையில் மட்டும் அல்லாது இந்திய துணைக்கண்டத்தின் வடகோடிவரை பரவின; தொடர்ந்தன. சுமார் இருநூறு ஆண்டு காலம் நீடித்த இந்த வீர வரலாற்றின் முடிவு நமக்கு சுதந்திரத்தை விடுதலையை பெற்று வழங்கியது. ஆதிக்க வெறியர்களுக்கு மரண அடி அளித்தது அவர்களை நமது நாட்டை விட்டு ஓடச் செய்தது.

இறைவனது சந்நிதானத்தில் இணைந்து சுடர்விடும் இலட்ச தீபங்களை ஒளி ஏற்றுவதற்கு ஒரே ஒரு சுடர்தான் பயன்படுகிறது. அதைபோன்று இந்த நாட்டில் இலட்சக்கணக்கான தொண்டர்கள், தீரர்கள். தியாகிகளது உள்ளங்களில், உரினும் மேலான தாய்நாட்டுப் பற்றையும், தியாக சிந்தனையயும் ஊட்டி, வெள்ளை அரசினருக்கு எதிராக வெகுண்டு எழச்செய்து, வெற்றி காண்பதற்கு, சுதந்திர தேவியின் சந்நிதானத்தை சுடர் மிகுந்த ஆலயமாக்குவதற்கு, மறவர் சீமையின் முத்துராமலிங்க சேதுபதி என்ற அக்கினிக் கொழுந்து பயன்பட்டு இருப்பதை விடுதலை வரலாறு விளம்புகிறது. அந்த வேள்வியில் தன்னையே ஆகுதியாக அளித்து பெருமை பெற்றுள் தியாகிகளின் பட்டியலில் முதலிடத்தில் விளங்குபவர் இந்த சேதுபதி மன்னர். அவரது நினைவிற்கு நமது விடுதலை இயக்கம் என்றென்றும் அஞ்சலி செலுத்தும் என்பதில் ஐயமில்லை.