பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

151

கிற்கு முன்னதாக மதிப்பீடு செய்ய இயலாத காரணத்தினால் ரூ 114| கூடுதல் செலவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்ததக் காரணத்தினால் மரியாதைக்குரிய கவர்னர், இந்தச்சடங்கு சம்பந்தமான முழுச்செலவினையும் அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சேதுபதி மன்னருடன் இங்கு சில பெண்கள் இருந்தனர். இவர்க ளைப்பற்றி அரசு ஆவணங்கள் எதிலும் குறிப்பிடப்பட வில்லை. மன்னரைச் சந்திக்கச் செல்லும் பொழுது, அவரும் அவர்களைப் பற்றி எதுவும் தெரிவித்ததும் கிடையாது. மன்னரை ஜார்ஜ் டவுனுக்கு அனுப்ப முனைந்த பொழுது அவர்கள் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களை அப்பொழுது சந்திக்க இயலவில்லை. அவர்களும் அவருடன் சென்று விட்டனர். பிறகு அவர்களைப் பற்றி விசாரித்ததில் அவர்கள் மூன்று பேர் என்றும், அவர்களுக்கு மூன்று குமுந்தைகள் - (இரு பையன்கள்) இருந்தனர் என்றும் தெரியவந்தது. மன்னரது இறப்பிற்குப் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், தற்பொழுது அவர்களது ஆசாரப்படியான இழவு காலம் முடிந்த பிறகு, அவர்கள் எதாவது முறையீடுகளுடன் வருவார்கள் என எண்ணுகிறேன்.

கோட்டையில் மன்னர் தங்கி இருந்த அறையில் அவரது சில பெட்டிகள் உள்ளன. அவைகளைப் பூட்டி காவலர் ஒரு வரது பொறுப்பில் அரசு ஆணையை எதிர்பார்த்து வைத்து இருக்கிறேன்.

இராமநாதபுரம் மன்னர் முத்து ராமலிங்க விஜய ரகுநாத செதுபதி அவர்களது அடக்கம் சம்பந்தமாக 23-1-1809 க்கும் 27-1-1809 க்குமிடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட செலவு விவரம்:

23- 1-1809 மன்னரது உயிர் இரவில் பிரிவதற்கு

ஏதுவாக பால்மாடும் கன்றும் தானம் கொடுக்க வாங்கியது

பக்கோடா பணம்
7.0.0

தானத்தைப் பெற்றுக்கொண்ட
பிராமணருக்கு அன்பளிப்பு

6. 0.0
இதர பிராமணர்களுக்கு 1. 19.10