பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுஇணைப்பு 2

இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி அவர்களது குடும்பத்தினராகிய ஏழு மனைவிகளும் லெட்சுமி, சந்திரமதி, பூரணம், பர்வதம், முத்தியாலு, லெட்சுமி காமாட்சி ஆகியோரும், அவர்களது குமாரர்களும், மகளும், அண்ணாரது பரம்பரைக் குமாஸ்த்தாக்களும் பணியாட்களுமாகிய சுப்பிரமணிய பிள்ளை மற்றும்முள்ளோரும் அனுப்பும் பணிவான விண்ணப்பம் :

நாங்கள், சேதுபதி மன்னருக்குப் பிரியமானவர்கள். அவரது அரண்மனை அந்தப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் அவரது 14வருட சிறை வாழ்க்கையிலும், அவரைத் தொடர்ந்து கவனித்து வந்துள்ளோம். திருச்சிராப்பள்ளியில் ஏழு ஆண்டுகளும், எஞ்சிய காலம் சென்னையிலும். அவரது பகைமையுணர்வு காரணமாக கும்பெனியாரால் அவரது பாரம்பரிய இராமநாதபுரம் ஜமீன்தாரியில் இருந்து நீக்கப்பட்டு சிறயில் அடைக்கப்பட்டதால் அவரது சிறைவாழ்க்கையில் பல விதமான சிரமங்களையும், கட்டுப்பாடுகளையும் நாங்களும் பங்கு, கொண்டு வந்தோம். அவருக்கு வழங்கப்பட்ட மாத ஊதியத்தொகையான ரூபாய் ஆயிரத்தையும் எங்களுக்குப் கொடுத்து கொடுத்து வந்தார். அந்தத்தொகை, எங்களது ஜீவியத்திற்குப் போதுமானதாக அமையாததால் வெளியில் கணிசமான தொகைக்கு கடன்பட்டுள்ளோம். தொடர்ந்து மன்னரைக் கவனித்து வந்தோம்.

எங்களது நம்பிக்கையெல்லாம், நாங்கள் வணங்கும் தெய்வம் கருணை புரிந்து எங்கள் மன்னரது பிரச்சனை பற்றி விசாரித்து அவரது குற்றமற்ற தன்மையை முடிவு செய்து அவருக்கு மீண்டும் ஆட்சியுரிமை நல்கப்படும் என்பதும், அதன்வழி எங்களது இன்னல்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பதுதான். ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்னர் எங்களது மன்னர் நோயுற்றார். நாளுக்கு நாள் மிகுதியான நோயினால் உணவுமீது வெறுப்பு ஏற்பட்டு அவரது உடல் தளர்ந்தது. தாங்கள் கருனை கூர்ந்து மத்துவர் ஒயிட்டை அனுப்பிவைத்து பலவித மருந்துகளைக் கொடுக்குமாறு செய்திர்கள். வெங்கிடாசலம் செட்டியாரது பிணையை ஏற்று மன்னரைக் கோட்டையிலிருந்து வெளியேற அனுமதித்து, மன்னரது உடல் நலம்பேண ஜியாஜ் டவுனிற்கு