விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
161
வரும் படாத பாடு பட்டனர். மேலிடத்திற்கு பல முறையீடுகள் அனுப்பினர். பலன் எதுவும் இல்லை. அவர்களது கண்ணிர் கதைகள் கும்பெனியாரது ஆவணங்களே கூறியுள்ளன. ஆனால் அன்றைய ஆளவந்தார்களுக்கு அந்த ஆவணங்கள் பொழுதுபோக்கு புதினமாக இருந்து இருக்க வேண்டும்! மன்னரது குடும்ப நலிவு பற்றி அவர்கள் கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் இறந்துபோன மன்னரது அஸ்தியை யாரிடம் ஒப்படைப்பது? அவர் சென்னைக் கோட்டையில் விட்டுச் சென்றுள்ள பெட்டகங்களுக்கு வாரிசு தாரர் யார்? என்பன போன்ற வீணான பிரச்சினைகளில் ஓராண்டிற்கும் மேலாக ஈடுபட்டு இருந்தனர்.
இதற்கிடையில், பசியிலும், பட்டினிக் கொடுமையிலும் பரிதவித்துக் கொண்டிருந்த மன்னரது குடும்பத்தினர் நிலையைக் கேள்வியுற்ற இராமனாதபுரம் ராணி மங்களேசுவர நாச்சியார், அந்தக் குடும்பத்தினருக்கு சமஸ்தான நிதியில் இருந்து, மாதந் தோறும் உதவித் தொகை வழங்கி உதவினார். ஆனால், இந்த ஏற்பாடும், ராணியார் கி. பி. 1812-ல் இறந்தவுடன் தடைப்பட்டது. அப்பொழுது கலெக்டராக இருந்த ரூயிஸ் பீட்டர் மூலம், கும்பெனியாரது உதவியை அந்தக் குடும்பத்தினர் நாடினர். பரங்கியரான கலெக்டரது பரிந்துரைக்குக்கூட பயன் கிட்டவில்லை. இடையில் இராமனாதபுரம் சமஸ்தான நிர்வாகிகள் வேண்டா வெறுப்பாக அந்தக் குடும்பத்தினருக்கு சில சமயங்களில் உதவி வந்தனர். தாங்கள் குடியிருந்த விட்டின் இடிபாட்டைக்கூட பழுதுபார்க்க முடியாமல், கும்பெனியாரது உதவி கோரிய அவர்களது முறையீடுகளைப் பற்றிய ஆவணங்களைப் படிக்கும் யாரும் கண்ணிர் வடிக்காமல் இருக்க முடியாது.
இங்ஙனம், கி.பி. 1809-ல் தொடங்கிய அவர்களது கண்ணீர்க் கதை, வழிவழியாக, ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமாகத் தொடர்ந்து வந்து இருப்பதிலிருந்து அந்த அப்பாவிகளது அவலத்தின் மிகுதியையும், ஆழத்தையும் யாரும் எளிதில், புரிந்து கொள்ள இயலும். முத்து ராமலிங்க சேதுபதி மன்னரது மகன் கல்யாண ராமசாமித் தேவரது வழியினர், கி.பி. 1920-ல் கூட 'காருண்யமிக்க' ஆங்கில ஆளுநருக்கு உதவி கோரிய முறையீடு ஒன்று உள்ளது. மன்னரது ஏனைய மக்களான பட்டாபி