பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

எஸ். எம். கமால்

இதைப்போலவே கி.பி. 1761-ல் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்களது பாண்டிச்சேரிக் கேர்ட்டை மீது போர் தொடுத்தனர் . இந்தப் போர்ச் செலவும் நவாப்பின் பற்றுக் கணக்கில் எழுதப்பட்டது. காரணம் பிரஞ்சுக்காரர்கள் நவாப்பின் எதிரிகள் அல்லவா?

இவ்விதம் பாக்கிப்பட்டுப்போன கடனை வசூலிப்பதற்கு, கும்பெனியார் கி.பி. 178 , 1785, 1787, 1792 ஆகிய ஆண்டுகளில் நவாப்புடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்னர். இதன் மூலமாக தென்னக அரசியலில் நேரடியாகத் தலையிட்டு தாங்களே மறைமுகமான ஆட்சியாளராக மாறினர். கி.பி. 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்தவுடன் அவரது மகன் உம்தத்துல் உம்ராவை நவாப்பாக மதிக்காதததுடன் அவர் மீதும் அவரது இறந்த தந்தையின் மீதும் வீண் பழிகளை கும்பெனியார் சுமத்தினர். இந்தக் கவலையினால் மனம் உடைந்த நவாப் கி.பி. 1801-ல் இறந்து போனார். அவரது மகன் தாஜுல் உம்ரா நவாப்பாக இருப்பதற்கு தகுதி இல்லையென புறக்கணித்து விட்டு அவரது சிறிய தந்தையின் மகனான அஜிம் உத்தெளலாவை நவாப்பாக அங்கீகரித்தனர். அவரையும் மிரட்டி, அவரிடமிருந்து அதிகார பூர்வமாக தென்னகம் முழுவதற்கும் ஆளும் உரிமையைப் பறித்தனர். ஆற்காட்டு நவாப் என பெயரளவில் இருந்த அவர் கி.பி. 1819-லும் அவரது மகன் கி.பி. 1825-லும் இறந்த பிறகு அவர்களது குடும்பத்தினரை சேப்பாக்கம் அரண்மனையில் இருந்து அகற்றிவிட்டு, அந்த மாளிகையைப் பொது ஏலத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். குதிரை, வீரனைக் குழியில் தள்ளியதுடன் மண்ணை வாரி மூடிய கதை!

தமது கும்பெனி நண்பர்களுக்கு அண்மையில் இருக்க வேண்டுமென்பதற்காக, நவாப் முகம்மது அலி ஆற்காட்டில் இருந்து சென்னைக்கு வந்து கும்பெனியினரது கோட்டைக்கு அருகிலேயே இந்த மாளிகையை அமைத்து மிகுந்த ஆரவாரத் துடன் குடியேறினர். அன்றைய அந்த 'புதுமனை புகுதலை' மிகச் சிறப்பாக நடத்தினார். கோட்டையில் இருந்த கவர்னர் உள்ளிட்ட அனைத்துப் பரங்கிகளையும் தமது புதிய மாளிகைக்கு வரவழைத்து பெரும் விருந்து நடத்தி, அன்பளிப்பும் வழங்கி,