பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

171

துவக்கினர். அதற்காக கி.பி. 1612-ல் சூரத்திலும், கி.பி.1639ல் சென்னையிலும் கி.பி. 1692-ல் பம்பாயிலும், கி.பி. 1692-ல் கல்கத்தாவிலும் தங்களது பண்டக சாலைகளை நிறுவினர்.

அவர்களது வியாபாரம் எப்படி நடைபெற்றது என்பதை வங்காள நவாப் இங்கிலாந்து நாட்டுப் பேரரசர்க்கு அனுப்பிய புகாரில் இருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ...தங்களது நாட்டு வியாபாரிகள் குடிகளிடமிருந்து உள்ளுர் வணிகர்களிடமிது பொருட்களை பயமுறுத்தி எடுத்துச் செல்கின்றனர். அவர்களது அடாவடித்தனத்திற்கு ஆளாகிய குடிமக்கள் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு விலையாக ஒரு ரூபாயைப் பெற்றுக் கொள்ள கொள்ள வேண்டியதாக உள்ளது.' இவ்விதம் வாணிபம் நடத்திய அவர்கள் நாளடைவில் வங்காளத்தில் இருந்த, முகலாயப் பேரரசரது பிரதிநிதிக்கு எதிரான சூழ்ச்சிகளிலும், சதிகளிலும் ஈடுபட்டு அவரை கி. பி. 1757-ல் பிளாசிப் போரில் தோற்கடித்து, வங்காள பீகார் பகுதிகளில் தங்களது நிர்வாகத்தை மேற்கொண்டனர். அதே காலத்தில் தெற்கே, ஆறாகாட்டு நவாப்பிற்கு எதிரான உள்நாட்டு போ ர்களில் நவாப்பிற்கு ராணுவ உதவி வழங்கியதுடன், அவரைத் தங்களுடைய கடனாளியாக மாற்றி, முழுக்க முழுக்க அவர்களையே நம்பி இருக்குமாறு செய்தனர். இதனால் நவாப் முகம்மது அலி, அாகளுக்கு பல சலுகைகளை அளித்தார். அவர் கொடுக்கவேண்டிய பாக்கிக்காக சில மாவட்டங்களில் வரி வசூலிக்கும் உரியையும் கி.பி. 1781-85-ல் வழங்கினார்.

மைசூர் மன்னர் திப்புசுல்தானுடன் நடத்திய போரின் முடிவில், கி.பி. 1792-ல் தானமாகப் பெற்ற சத்தியமங்கலம், சேலம், திண்டுக்கல் பகுதிகளுடன் ஆற்காட்டு நவாப்பிடம் இருந்து ஒப்பந்தத்தில் பெற்ற திருநெல்வேலி, மதுரை, மறவர் சீமைகளிலும் முதன் முதலாக, வியாபாரத்துடன் வரி வசூலை மேற்கொண்டனர். கி.பி. 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்தவுடன் அவரது வாரிசுகளைத் தொடர்ந்து பயமுறுத்தி நிர்ப்பந்தித்து எஞ்சிய தமிழ்நாட்டின் பகுதிகளையும் நவாப்பின் அதிகார வரம்பிலிருந்து முழுமையாகப் பெற்று கி.பி. 1801-ல் கர்நாடகம் முழுவதும் தங்களது புதிய ஆட்சி முறையை அமுலுக்கு கொண்டு வந்தனர்.