பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

3

கணவனுடன் தீக்குளிக்கும் கொடிய பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.[1] மறவர் மக்களிடம் அவர்களது ஒப்பற்ற ஒரே தலைவர் என்ற முறையில் சேதுபதி மன்னரிடம் அவர்களுக்கு மட்டற்ற மரியாதையும் அன்பும் இருந்தன.

புதுக்கோட்டை தொண்டைமானும், தஞ்சாவூர் சீமையில் பதினெட்டுப் பாளையக்காரர்களும், மன்னரது சமூகத்தில் கை கூப்பிய வண்ணம் பணிவுடன் நின்றனர்.

பாஞ்சாலங்குறிச்சி கெட்டி பொம்மூவும், காடல்குடி நாயக்கரும், தொக்கலை தொட்டியனும் இதர ஜாதி பாளையக்காரர்களும் மன்னரைச் சந்திக்கும் பொழுது அவர் முன்னர் வீழ்ந்து சாஸ்டாங்கம் செய்யும் வழக்கம் இருந்தது.

ஆனால் எட்டையாபுரம், ஊத்து மலை, சுரண்டை, சிவகிரி, சேத்துார், தலைவன் கோட்டை பாளையக்காரர்கள், இத்தகைய பாவனைகள் எதுவுமின்றி சேதுபதி முன்னர் பணிவுடன் நின்று வந்தனர்.

இந்த சேதுபதி மன்னர்களது ஆட்சித் துவக்கம், அவர்களது முன்னோர் மரபு பற்றிய முறையான வரலாற்றுச் செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை. புராணங்களும், பிற்கால இலக்கியங்களும் இந்த மன்னர்களை இராமாயண இதிகாசத்துடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றன. இராமபிரான் சீதையை மீட்டுத் திரும்பும் பொழுது, இராமேசுவரத்தில் இராமலிங்க பிரதிஷ்டை செய்து அந்த லிங்கத்தையும் சேது அணையையும் காத்து வருவதற்கு நியமிக்கப்பட்ட மறவர் தலைவரது வழித் தோன்றல் இவர்கள் என பழங்கதை ஒன்று தெரிவிக்கின்றது.

இன்னொரு ஆவணத்தின்படி தங்களது அரசர்களாக இருந்த பாண்டியர்கள் வலுவிழந்த பிறகு அவர்களை வென்று, மதுரையையும் தஞ்சையையும் கொண்ட பரந்த பகுதியை


  1. Edgar Thurston, Caste and Tribes of South India 19 09, Vol. 5 pp.

1. Nelson, Manual of Madura Country 1861 , Part III, Ch. || .

2. Pharoah, Gazetteer of South India, 1856, P. 392.