பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

175

ஊழியர் பணிகள் ஆகியவைகளைச் சித்தரிக்கும் பல ஓவியங்கள் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. காலத்தையும் வென்று காட்சியளிக்கும் இவ்வளவு ஓவியங்கள் ஒரே இடத்தில் இந்தியாவில் வேறு எங்குமே இல்லையென தொல்பொருள் துறை மேதை திரு. நாகசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆற்காட்டு நவாப்பிற்காக, முற்றுகையிட்டு இராமனாதபுரம் கோட்டையை 3-6- 1772-ல் மறவரது கடும் போருக்குப் பிறகு கைப்பற்றிய தளபதி ஜோஸப் ஸ்மித் இந்த அரண்மனையைப் பார்த்து வியந்து வரைந்துள்ளார். கும்பெனியார் முத்து ராமலிங்க சேதுபதி மன்னரைப் பதவி நீக்கம் செய்து அவரை திருச்சிக் கோட்டையில் அடைத்து வைத்து இருந்த பொழுது, இந்த அரண்மனையைத் தங்களது இருப்பிடமாகவும், அலுவலகமாகவும், கலெக்டர் பவுனியும், கலெக்டர் ஜாக்ஸனும் பயன்படுத்தினர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான வீர பாண்டியகெட்டி பொம்மு நாயக்கரை இந்த அரண்மனையின் மச்சுவீட்டில் மூன்று மணி நேரம் நிற்கவைத்து விசாரணை செய்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் வீரபாண்டியனாக மாறினர். கெட்டி பொம்முவின் புகார் மனுமீது மூன்று பேர் கொண்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி கலெக்டர் ஜாக்ஸ்னையும் கெட்டி பொம்முவையும் விசாரிக்குமாறு சென்னை கவர்னர் உத்தரவிட்டார். அந்த குழுவினரது விசாரணை இந்த அரண் மனையில் தான் நடந்தது.

அறிஞர் பெருமக்களின் அரிய படைப்புக்களும் கலைஞர் பலரது சிறந்த கலைநிகழ்ச்சிகளும், அரங்கேற்றம் பெறுவதற்கும் பரிசுகளும் பாராட்டுக்களும் பெறுவதற்கும் இந்த அரண்மனை ஆய்வுக்களமாக விளங்கியது என்பது பிற்கால வரலாற்றில் இருந்து தெரிகிறது.

9. இராமேஸ்வரம் திருக்கோயில் மூன்றாவது பிரகாரம்

இராமேஸ்வரம் திருக்கோயில், இராமனாதபுரம் சேதுமன்னர்களது பண்பட்ட சமய உணர்வையும் கலை ஆர்வத்தையும் காலமெல்லாம் காட்டி நிற்கும் கலங்கரை விளக்கமாகும். இந்த கோயிலின் கட்டுமானங்கள் அனைத்திலும் சிறப்பாகக் கருதப்படுவது மூன்றாவது பிரகாரமாகும். இந்தக் கலைப்பணி கி.பி.