உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

எஸ். எம். கமால்

போர்ட்டோ நோவோ பக்கோடா செலாவணியில் இருந்தது. அதனால் கும்பெனியார் தங்களது நாணயத்துடனான டச்சு நாணய மதிப்பைக் கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்து இருந்தனர்.

கி.பி. 1801-ல் 116 போர்ட்டோ நோவோ பக்கோடா 100 ஸ்டார் பக்கோடா டாவுக்கு சமம்
கி. பி. 1806 -ல் 120 ௸ 100 ௸
கி.பி. 1821-ல் 34 ௸ மதராஸ் ரூபாய் 0.13, 4-க்குச் சமம்

கி.பி. 1825-க்குப் பிறகு இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து மறைந்தது.

கி.பி. 1798-ல் 100 ஸ்டார் பக்கோடா 350 ஆற்காட்டு ரூபாய்களுக்கு சமம்
கி.பி. 1799-ல் 1 ஸ்டார் பக்கோடா 16 உள்ளூர் தங்கபணம்
கி.பி. 1800-ல் 1 ஸ்டார் பக்கோடா 42 ௸

11. பிரதானி தாண்டவராய பிள்ளை

சிவகங்கைச் சீமையின் முதலாவது மன்னராக இருந்த சசிவர்ணப் பெரிய உடையாத் தேவருக்கும் அவரை அடுத்து அரியணை ஏறிய முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவருக்கும் பிரதானியாகப் பணியாற்றியவர் இவர். பிரதானி என்பது நிர்வாகப் பொறுப்பிற்குரிய அமைச்சர், படையணிக்குள்ள தளபதி ஆகிய இருபதவிகளும் இணைந்த பெரும் பதவி. அரசருக்கு அடுத்த இடம். இந்த உயர்ந்த நிலையை, சாதாரண கருணிகர் குடும்பத்தில் தோன்றிய இவர் எய்தியதற்கு அவரது திறமையும் அறிவுடமையுமே காரணம் ஆகும்.

மறவர் சீமையின் பிரதானியாக இராமனாதபுரத்தில் இருந்த தாமோதரம் பிள்ளையும் இவரும் உடன்பிறப்புக்கள் போன்று அரசியலில் ஒரே கொள்கையுடன் அன்னியோன்னியமாக இருந்து வந்தனர். மதுரையில் முடிந்து போன நாயக்கப் பேரரசை நிறுவுவதற்கு இருவரும் இணைந்து முயன்றனர். அப்பொழுது ஆற்காட்டு நவாப்பாக இருந்த சந்தா சாகிப்பை