பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6
எஸ். எம். கமால்
 

இந்த மன்னர்களது காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த அரசர்களது ஆட்சியின் போதும் ஏற்பட்ட தஞ்சை மராத்தியரது படை எடுப்புகள் நாட்டுப் பிரிவினை ஆகிய காரணங்களினால் மீண்டும் இந்த நாட்டின் எல்லைகளில் மாற்றமும் மொத்தப் பரப்பில் சுருக்கமும் ஏற்பட்டன. மறவர்களது இந்த தன்னரசு பரப்பு ஆங்கிலேயரது ஆவணங்களில் மறவர் சீமை அல்லது பெரிய மறவர் (Great Marawa) என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதுபதிகளும் தங்களை ஆளப்பிறந்த அரசர்கள் என எண்ணிக் கொள்ளாமல் இராமபிரானது அடிமைகளாகவே தங்களைக் கருதி ஆட்சி செலுத்தி வந்தனர். இராமேசுவரத்தில் உள்ள இராமநாத சுவாமிக்கு தொண்டு செய்து வாழ்வதை, தங்களது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு தங்களது ஆட்சியை இராமநாத சகாயம்' என வழங்கி வந்தனர். தங்கள் ஆட்சியின் பொழுது இராமநாதசுவாமிக்கு அன்றாட பூஜை, மற்றும் ஆண்டுத் திருவிழாவுக்கென ஏராளமான கிராமங்களை சர்வமான்யமாக அளித்ததுடன், பொன்னையும், பொருளையும் அன்பளிப்பாக வாரி வாரி வழங்கினர். இவைகளினால் திருப்தி அடையாத இந்த மன்னர்கள் கோவிலில் நடக்கும் அர்த்த சாம பூஜையில் கலந்துகொண்டு, முடிவில் அவர்களே தீவட்டி ஏந்தி சுவாமியை வழிநடத்தி பள்ளியறையில் சேர்ப்பிக்கும் பணியையும் அண்மைக்காலம் வரை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்த மன்னர்கள் ஆண்டு முழுவதும் சேதுயாத்திரையாக இராமேசுவரம் வருகின்ற ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சேது பாதை நெடுகிலும் ஆங்காங்கு உணவும், உறையுளும் அளிப்பதற்கு பல அன்னச் சத்திரங்களை அமைத்து பராமரித்து வந்தனர். இந்த சத்திரங்களின் இடிபாடுகளை, இன்னும் சேது பாதையில், தொடர்ச்சியாக பல இடங்களில் காணலாம்


கிடைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின்படி, கி.பி. 1434ல்

உடையான் சேதுபதி என்பவர் ராமேசுவரம் மேலக் கோபுரம், திருமதில் திருப்பணியை மேற்கொண்டதாலும்[1] கி.பி. 1559-ல்


  1. R. Srinivasa Iyor, Brios notes on the History and Traditions of Ramoswaram Temple, (1914), p. 4.