பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
எஸ். எம். கமால்
 

விடுதலை செய்து, சேது நாட்டை அவர் மீண்டும் ஆளுமாறு செய்தார்.[1]

அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த திருமலை ரகுநாத சேதுபதி, திருமலை மன்னருக்கு பக்கபலமாக இருந்து, அவரது 72 பாளையக்காரர்களுக்கும் தலைமை ஏற்கும் தகுதியுடையவராக இருந்தார். நெல்லைப் பகுதியில் எட்டையபுரம் பாளையக்காரரும், இன்னும் சிலரும் திருமலை மன்னருக்கு எதிராக சினந்து எழுந்த போது, இராமநாதபுரம் மன்னர் மறவர் படையுடன் சென்று எட்டையபுரம் பாளையக்காரரைக் கொன்று ஒழித்து, கிளர்ச்சியை அடக்கி திரும்பினார். மனம் மகிழ்ந்த திருமலை மன்னரும் மறவர் தலைவருக்கு பல சிறப்புக்களைச் செய்து பாராட்டினார்.[2] அந்த வீர நிகழ்ச்சியை நினைவுறுத்தும் வண்ணம் சேதுபதியும் அன்று முதல் தனது இடது காலில் எட்டப்பனது தலை உருவம் கொண்ட வீரக் கழலை அணிந்து வரலானார். அதனை,

கானில் வன்கல்லை பெண்ணாக்கிய காலில்,
எட்டன் தலையார் விஜயரகுநாத சேது தளசிங்கமே”

என பாவலரும் பாராட்டிப் பாடினர்.[3]

கி.பி. 1659-ல் திருமலை நாயக்கர் நோயுற்று நலிந்த நிலையில் இருந்த பொழுது, மைசூர் படைகள் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தன. இந்த இக்கட்டான நிலையை அறிந்த திருமலை சேதுபதி இருபதினாயிரம் மறவர்களைத் திரட்டி மதுரை சென்றார் மைசூர் படைகளைப் பொருதி அழித்ததுடன் எஞ்சியவர்களைக் கொங்கு நாட்டின் எல்லைவரை துரத்தியடித்து விட்டு வந்தார். மதுரை மண்ணுக்கும் நாயக்க ஆட்சிக்கு நைரவிருந்த, மாபெரும் பழியையும், இழப்பையும் நீக்கிய சேதுபதி மன்னரை பல வழிகளிலும் பாராட்டி சிறப்புக்களை வழங்கினார் திருமலை நாயக்கர் அவைகளில் நாயக்க


  1. Sathianatha Iyer, Thamilaham In 17th Century (1956)
  2. Rajaram Raw, Ramnad Manual (1891). P. 22-1.
  3. மிதிலைப்பட்டி அழபிய சிற்றம்பலக் கவிராயர், தளசிங்க மாலை; செந்தமிழ் தொகுதி 6, பக். 44-50.