பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

9


அரசுக்கு சேதுபதி மன்னர் ஆண்டுதோறும் அளிக்கும் திறைப் பணத்தை செலுத்த தேவையில்லை என்பதும் ஒன்று[1] அவரைத் தொடர்ந்து இராமநாதபுரம் அரசு கட்டிலுக்கு வந்த பன்னிரண்டு சேதுபதிகளும், ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தன்னாசாக இருந்து வந்ததை வரலாறு விளம்புகிறது.

அவர்களின் பட்டியலில், இறுதியாக இடம் பெறுபவர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி என்பவர். அதுவரை எந்த சேதுபதி மன்னரும் சந்தித்திராத பிரச்சினைகளையும், அனுபவித்தறியாத அல்லல்களையும் இந்த மன்னர் அணுக வேண்டியிருந்தது. அந்த ஆபத்தான கொடிய சோதனையில், தமது பரம்பரையின் ஆளும் உரிமையை மட்டும் அல்லாமல் தமது இனிய உயிரையே அர்ப்பணித்தார்.

தன்மான உணர்வினுக்கும் தன்னரசுப் போக்கிற்கும் அத்தகைய உயர்ந்த விலையை-தியாகத்தை-அளித்த அந்த மன்னரது வாழ்க்கையை வரலாற்றுப் பார்வையில் ஆய்வு செய்வது இந்த முயற்சி.


  1. Sathiyanatha Iyer, History of Madurai Nayaks (1924), p. 136.