பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
இராமநாதபுரம் கோட்டை

மறவர் சீமையின் மகுடம் இராமநாதபுரம் கோட்டை, இதனை அமைத்த மன்னர் யார் என்பது வரலாற்றில் இல்லை. ஆனால் இங்கு இருந்த மண்கோட்டையை கல்கோட்டையாக அமைத்து சேதுபதி மன்னர்களது தலைமையிடமாக மாற்றி அமைத்தவர் வரலாறு புகழும் கிழவன் சேதுபதி என்ற ரகுநாத சேதுபதி (1675-1710) ஆகும்.[1] ஏனெனில் அதுவரை சேது மன்னர்கள் குலோத்துங்க சோழ நல்லூர், விரையாதகண்டன் புகலூர், ஆகிய ஊர்களை தங்களது இருப்பிடங்களாகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தனர். கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தில் சேதுநாட்டின் எல்லைகள் பரந்து விரிந்த பரப்பினை கொண்டிருந்ததாலும் எல்லைகளில் இருந்த மதுரை நாயக்க அரசு, தஞ்சை மாரத்திய அரசு ஆகியோரின் கண்ணோட்டம் இந்த கடற்கரை நாட்டின் மீது நிலைத்து வந்ததாலும் இந்த நாட்டின் தலைமையிடமாக இராமநாதபுரத்தை தேர்வு செய்தார் கிழவன் சேதுபதி


இந்த கோட்டை இருபத்து ஏழு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் கொண்ட கல்கோட்டையாக போர்ப் பணிக்கு உதவும் நான்கு அலங்கங்களைக் கொண்டதாகவும் அவர் அமைத்தார். நீண்ட சதுரவடிவில் கிழக்குப் பக்கத்தில் மட்டும் ஒரே ஒரு தலைவாயிலைக் கொண்டதாகவும் நான்கு புறமும் ஆழமான அகழியை அங்கமாகவும் பெற்றிருந்தது இந்த அாண். இதனையும் இதனுள் அமைக்கப்பட்ட இராமலிங்க விலாசம் என வழங்கப்படும் அழகிய மாளிகையையும் அமைக்க சேதுபதி மன்னருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அமைச்சர்


  1. Rajaram Row. T., Ramnad Manual (1891,) p. 226.