பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எஸ். எம். கமால்

மிப்புப் படை கோட்டையில் உள்ள மக்களது உடைமைகளை கொள்ளை கொண்டது.[1] இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றி விவரத்தை தளபதி ஜோசப் ஸ்மித் விவரமான அறிக்கை மூலமாக சென்னை கோட்டைக்கு அனுப்பினார். 'இந்தக் கோட்டை பழமையானது. இங்குள்ள அரண்மனை இந்த நாட்டில் நான் கண்ட மிகச்சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாகும். அங்குள்ள அரச குடும்பத்தினர் கீழை நாடுகளுக்குரிய சிறந்த ஆடம்பரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வாழ்க்கை இனியும் எங்கே கிட்டப் போகிறது! அரசர் பன்னிரண்டு வயது பாலகன். அரசியார் எங்களுடைய பார்வையில் தட்டுப்படவில்லை. மணம் புரியத்தக்க இரண்டு பெண்மக்கள் அவருக்கு இருக்கின்றனர். இவர்களுக்கு நேர்ந்துள்ள இக்கட்டான நிலைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். இங்கு மூவாயிரம் வீரர்கள் இருந்தும் அவர்கள் மீது திடீரென தாக்குதல் தொடுக்கப்பட்டதால் அவர்களுக்கு என்ன செய்வது? நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது புரியவில்லை' எனக் குறிப்பிட்டு இருந்தார்.[2]


இன்னொரு அறிக்கையில் '...இந்த தாக்குதலில் இரண்டு பரங்கிகள் கொல்லப்பட்டனர். தளபதி பிரைட் மட்டும் ஈட்டித் தாக்குதலினால் படுகாயம் அடைந்தார். பீரங்கிப்படை அணி சிறப்பாகவும் அமைதியாகவும் செயல்பட்டது. எங்களை எதிர்த்த மறவர்களும் மிகுந்த வீரத்துடன் போரிட்டனர். குடிமக்களும் ஏதாவது ஒரு ஆயுதத்தை ஏந்தியவர்களாக வந்து போரிட்டனர். தாக்குதல் திடீரென தொடுக்கப்பட்டதால் அவர்கள் திகைத்து தவித்தனர். இந்த நிலையில் அவர்களை வெற்றி கொள்வது நமக்கு எளிதாக அமைந்து விட்டது. சிலர் அரண்மனைக்குள் ஓடினர். அரசியாருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, இன்னும் சிலர் கோட்டை மதிலில் இருந்து விழுந்து இறந்தனர். நமது துருப்புகள் முன்னேறி வருவதற்குள் இந்தக் குழப்பம் முழுவதும் ஒருவகையாக ஓய்ந்து விட்டது. அரசியாரும், இளவரசரும், பிரதாவி பிச்சைப்பிள்ளையும் இப்பொழுது நமது கைதிகளாக


  1. Mlly, Conn., Vol. 42, 8-6-1772, p. 488.
  2. MIly, con, Vol 42. 8.6-1772, p. 488.