பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

27

பற்றிய மருது சகோதரர்கள் மறைந்து போன சிவகெங்கை மன்னரது மனைவி வேலுநாச்சியாரை சிவகெங்கைச் சீமையின் அரசியாக அறிவித்து அவருக்கு உதவும் பிரதானிகளாக நியமனம் பெற்றனர்.[1]


இராமநாதபுரம் சீமையிலும் இத்தகையதொரு இறுதித் தாக்குதலைத் தொடுத்து இராமநாதபுரம் கோட்டையையும், இதர பகுதிகளையும் கைப்பற்ற மாப்பிள்ளைத் தேவர் முயன்றுவந்தார். அவரது முயற்சிக்கும் மைசூர் மன்னரது உதவி பின்னணியாக இருந்தது. தம்முடைய பிடிப்பினின்றும், சிவகெங்கையைப் போல மறவர் சீமையும் நழுவிச் செல்வதை உணர்ந்த நவாப், அதனைத் தடுப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்தித்தார். சிறையிலிருக்கும் சேது மன்னர்தான் இந்தச் சூழ்நிலையில் தனது நிலையை தக்கவைக்க உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்தார். அந்தத் துறையில் செயல்பட்டார்.


பன்னிரண்டு வயது பாலகனாக இருந்தபொழுது சிறைப் படுத்தப்பட்டு திருச்சிக் கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசர் முத்துராமலிங்கம், இருபது ஆண்டுகள் நிரம்பிய இளம் மன்னராக இராமனாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டார்.[2] சிறையில் அவரது அன்னையார் இயற்கை எய்தியதால் அவாது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியார் மட்டும் உடன் வந்தார். இராமனாதபுரத்திற்கு திரும்பிச் செல்ல இயலுமா என எண்ணி ஏங்கி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த இளைஞர் முத்துராமலிங்கத்தின் இதயம் இராமனாதபுரம் கோட்டை வாயிலைக் கண்டவுடன் மகிழ்ச்சியால் படபடத்தது.


வரலாற்றுப் புகழ்மிக்க அந்த வாசல் எத்துணையோ வீர நிகழ்ச்சிகளை அவருக்கு நினைவுபடுத்தியது. மறவர் சீமையின் மகுடமாக விளங்கும் அந்த வாயிலில் இருந்து கி.பி. 1659-ல் ரகுநாத திருமலை சேதுபதி தலைமையில் புறப்பட்ட மறப்படை, மதுரையை முற்றுகையிட்ட மைசூர் படைகளை அழித்து. புறமுதுகிட்டு ஒடும்படி செய்ததுடன், அவர்களை கொங்கு நாட்டின் எல்லை வரை துரத்தி சென்று வந்து திருமலை நாயக்க


  1. Kathirvelu, Dr. S., History of Marawas (1972) p. 166.
  2. Mily. Cons. Vol. 74, 30–4–1781, p. 1076.