பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

எஸ். எம். கமால்

மன்னரது மதுரை அரசை நிலைக்க வைத்தது. மேலும் மதுரை நாயக்கரது தயவிலே பாளையக்காரனாகிய எட்டப்பன், நாயக் கருக்கு அடங்காது கிளர்ச்சி செய்த பொழுது, அவனது பாளையத்தில் புகுந்து அவனது கொட்டத்தை அடக்கியதும், அந்தப் படைதான். மீண்டும் திருச்சிக் கோட்டையிலிருந்த மன்னர் சொக்கப்ப நாயக்கரை கி.பி. 1680-ல் சிறைப்படுத்தி வைத்திருந்த தளபதி ருஸ்தம்கானை கொன்று மன்னரை மீட்கக் கிழவன் சேதுபதியின் வீரர்கள் இங்கிருந்துதான் அணிவகுத்துப் புறப்பட்டனர். காலத்தால் செய்த உதவிகளையெல்லாம் மறந்து, மறவர் சீமை மீது ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணி மங்கம்மாளது படையையும், அவரது தளபதி நரசையாவையும் இதே கோட்டைவாசலின் எதிரில் கி. பி. 1702-ல் வெற்றி வாகை சூடினார் கிழவன் சேதுபதி...


கோட்டை வாசலைக் கடந்தவுடன் கண்களில் படுவது கொற்றவை இராஜ இராஜேசுவரியின் திருக்கோவில். சேது எனப்படும் புனித திருவணையின் காவலர்களான சேதுபதிகளின் குல தெய்வமாக விளங்கும் அம்பிகை, மைசூர் படைகள் மீது கொண்ட வெற்றியின் நினைவாக மதுரை திருமலை நாயக்கர் மன்னர் ரெகுநாத சேதுபதிக்கு வழங்கிய அன்பளிப்புகளில் ஒன்றான அந்தப் பொற்சிலை அங்கு வைத்து வணங்கப்படுகிறது. இதற்கு எதிரில் உள்ள மரகத பலி பீடம் இராயவேலூரிலிருந்த குமார விஜய ரகுநாத சேதுபதியின் இளவலான தளபதி தெய்வ கண்ணியினால் கொண்டுவந்து நிர்மாணிக்கப் பட்டதாகும்.[1]

அடுத்துள்ள இராமலிங்க விலாசம் அரண்மனை, கிழவன் சேதுபதியும், அவரது அன்புக்குரிய அமைச்சர் வள்ளல் சீதக்காதியும் இணைந்து திட்டமிட்டு அமைத்த கலைப்பேழையாகும் அதன் மணி வாயிலில் அகத்திய முனிக்கும், அதிகம் கற்றபேர்கள் ஆயிரம் கவிவாணர் இருந்தனர்.[2] பன்னூல் வல்லுநர் புலவர் பெருமக்கள் தங்கள் நன்னூலைப் படித்து பொன்னும்


  1. பெருந்தொகை, மதுரை தமிழ்ச்சங்க பதிப்பு (1935) பாடல் : எண் 1300.
  2. பெருந்தொகை, மதுரை தமிழ்ச்சங்க பதிப்பகம் பாடல் எண் 1290