பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4
பன்னிரு வருட ஆட்சியில்


வடக்கே கோட்டைப்பட்டினம் துவங்கி தெற்கே வேம்பாற்று எல்லையில் உள்ள கன்னிராஜபுரம் வரையிலான 120 கல் நீள கடற்கரையை கிழக்கு எல்லையாகக் கொண்ட சேது நாட்டின் ஆட்சியை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி சிறப்பாக நடத்தி வந்தார். அவரது ஆட்சியின் செம்மைக்கு சிறந்த பிரதானிகளான சங்கரலிங்கம்பிள்ளை, வேலுப்பிள்ளை, முத்திருளப்பபிள்ளை ஆகியோர் அடுத்தடுத்து பணியாற்றியது காரணமாக அமைந்தது. அவரது பன்னிரண்டு ஆண்டுகால ஆட்சியில் பல உன்னதமான பணிகள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக நிர்வாகத்திலும் குடிமக்களுக்கு உதவும் பல துறைகளிலும் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன. சேதுநாடு இரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்து மூன்று சதுரமைல் பரப்பினையுடைய இரண்டாயிரத்து நூற்று அறுபத்து எட்டு ஊர்களைக் கொண்ட நிலப்பரப்பாக இருந்தபொழுதும்,[1] நீர்ப்பாசன ஆதாரங்கள் குறைவான நிலையில் மக்கள் கடுமையான உழைப்பின் மூலம் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான விளைச்சலைக் கண்டு வந்தனர். இதில் தீர்வை, உம்பலம், ஊழியம் கங்காணம், தர்மம் என்ற பெயர்களில் சரிபாதியான மகசூலை அரசுக்கு செலுத்தும் அவல நிலை இருந்துவந்தது. அப்பொழுது சேது நாடு பதினேழு நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது என்றாலும் அங்குள்ள நஞ்சை புஞ்சை நிலங்களின் வேறுபட்ட விளைச்சல் திறனுக்கு ஏற்றவாறு கைப்பற்றி நிலத்தை சரியா அளந்து தீர்வை விதிக்கும் அளவுமுறை கைக்கொள்ளப்படாத நிலை. இதை நன்கு உணர்ந்த பிரதானி


  1. Rajaram Row T. Ramnad Manual (1891), pp. 9-1