பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
எஸ். எம். கமால்
 

குளம், முடுக்கங்குளம், வேலாயுதபுரம் ஆகிய ஊர்களில் புதிய சத்திரங்களை நிர்மாணித்து அவைகளில் அன்னதானம் நடைபெற தேவையான வருவாய் தருகின்ற ஊர்களை தானமாக வழங்கினார். மற்றும், ஏற்கெனவே தனவந்தர்களால் நிறுவப்பட்டு நொடித்த நிலையில் இருந்த தனுஷ்கோடி முகுந்தராயச் சத்திரம், இராமேஸ்வரம் முத்துக்குமாருபிள்ளைச் சத்திரம், திருப்புல்லாணி புருஷோத்தம பண்டித சத்திரம், வெள்ளையன் சேவைச் சத்திரம், அலங்கானுர், முடுக்கங்குளம் சத்திரம், பரமக்குடி, வேலாயுதபுரம் சத்திரம், நாகாச்சி மடம் சத்திரம் ஆகியவைகள், தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வண்ணம் அவைகளுக்கும் பல கிராமங்களை மான்யங்களாக வழங்கி உதவினார்.[1] இத்தகைய சத்திரங்களும், அவைகளுக்காக வழங்கப்பட்ட கிராமங்களின் விவரங்களும் இணைப்புப் பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளது.


இவைகளுக்கெல்லாம் மேலாக, இந்த மன்னரது ஆட்சியில், பழம் பெரும் தலங்களான திரு உத்திர கோச மங்கை, திருச்சுழியல், இராமேஸ்வரம் ஆகிய ஆலயங்களின் திருப்பணிகளும், மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன. உலக அற்புதங்களில் ஒன்றாக எண்ணத்தக்க இராமேஸ்வரம் கோவிலின் மூன்றாம் பிரகாரத் திருப்பணியும், இவரது ஆட்சியின் பொழுதுதான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.[2] அத்துடன் இராமநாதசுவாமி சன்னதியிலுள்ள சொக்கட்டான் மண்டபமும், இவரது திருப்பணிகளில் எழுந்த ஒன்றாகும்.[3]


இத்தகைய சிறந்த பணிகளை நிறைவேற்ற உயர்ந்த உள்ளம் மட்டும் அல்லாமல், உன்னத பொருள் வசதியும் வேண்டுமல்லவா? குடிகள் கொடுக்கும் வரிப்பணம் அனைத்தையும், திருப்பணிகளுக்கு செலவழித்துவிட்டால் நிர்வாகம், பாது


  1. Boardis Misc Register. (1812), Vol. No. 6, pp. 301-406.
  2. கமால் எஸ். எம்., இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984), பக். 17.
  3. Vanamamalai Pillai, N. The Setu and Rameswaram (1929), p. 121.