பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

39

காப்பு போன்ற துறைகளுக்கான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆதலால், பொருள் வருவாய்களை பெருக்கும் பல துறைகளிலும், அவர் ஈடுபட்டிருந்ததை வரலாற்று ஆவணங் களில் காணமுடிகிறது. (இக்கால அரசுத்துறை, பொதுத்துறை ஆகியவைகளை ஒத்த நிறுவனங்கள், உற்பத்தியிலும், அரசு வணிகத்திலும் ஈடுபட்டிருப்பது போன்று. இருருாறு ஆண்டு களுக்கு முன்னரே, அவர், அரசுத்துறை வணிகத்தைத் துவக்கி வளர்த்து வந்தார்).


தமது செம்மையான ஆட்சியில், நெல் அரிசி, எண்ணெய், கருப்புக்கட்டி போன்ற அன்றாடத் தேவைகளின் மொத்த வியாபாரத்தை, தமது அரசுப் பணியாளர்களின் ஒரு பிரிவினரைக் கொண்டு நடத்தி வந்தார். இராமநாதபுரம் அரசுக்கு வரியாக ஆண்டுதோறும் அரசுக் களஞ்சியத்திற்கு வந்து சேரும் ஆயிரக் கணக்கான கலம் நெல்லை அப்பொழுதுக்கப்பொழுது, இராமனாதபுரம் கோட்டைக்கு எதிரே அமைந்திருந்த பேட்டையில் வியாபாரிகளுக்கு விற்று வந்தார்.


பொதுவாக மறவர் சீமையில் மழை அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டாலும், மழைவளம் பெற்று விளைச்சல் ஏற்படும் பொழுதும் மக்களது தேவைக்கு அதிகமான அளவு நெல் விளைச்சல் இருந்ததாகத் தெரிகிறது. குடிமக்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள நெல்லையும் மன்னரது தீர்வையாகப் பெறுகின்ற நெல்லையும் மன்னரது அலுவலர்கள் விலைக்கு வாங்கி பல இடங்களில் சேகரம் பட்டறைகளில் சேமித்து வந்தனர். பொது வணிகத்தை அரசு மேற்கொண்டு இருந்ததால், இந்த நெல் உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்களுக்கு விற்கப்பட்டது. இவ்வித சேமிப்பிற்கும் வறட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் தானியங்களைப் பாதுகாத்து வருவதற்கும் இந்த மன்னார் கிழக்கு கடற்கரையில் உள்ள ஊர்களில் சில இடங்களில் தானியக் களஞ்சியங்கள் கட்டப்பட்டு இருந்தன. குறிப்பாக ஆங்கரையில் மூன்றும், பாம்பனில் ஒன்றும், இராமேசுவரத்தில் மூன்றும், தேவிபட்டினத்தில் இரண்டும், திருப்பாலைக்குடியில் ஒன்றும், நம்புதானையில் ஒன்றும் தீர்த்தவாடியில் ஒன்றும். கீழக்கரையில் ஒன்றுமாக மொத்தம் பதினோரு சிறு களஞ்சியங்கள் இருந்தன. இவைகளின் மொத்த கொள்ளளவு 41,580