பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5
கும்பெனியாரும் சேதுபதியும்

1792-ம் ஆண்டு

மன்னர் முத்துராமலிங்க சேதுபதி தமது முன்னோர்களின் அடிச்சுவட்டில், சேது நாட்டை வளமை மிக்கதொரு தன்னரசு ஆக இருத்தி வைக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கில், வளமையையும் அமைதியையும் நிலவச் செய்யும் ஆக்கங்களில் முனைந்து இருந்த நேரம். அந்தத் திக்கில் தமது எண்ணம் ஈடேறும் நாளை நோக்கி எதிர்பார்த்து இருந்தார். அன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த பழமையான இரண்டு அரசுகளான தஞ்சையும், முகவையும், ஆற்காட்டு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வருடப் பணமான பேஷ்குஷ் தொகையை செலுத்த வேண்டிய நிபந்தனைக்குள் இருந்தன. இந்தக் கட்டுப்பாட்டுத் தளையையும் உதறி விட்டால். இதன் விளைவு நவாப்பின் கோபத்திற்கும், படையெடுப்பிற்கும் சேது நாடு மற்றொரு களமாகி விடும். போர் எனில் புளகாங்கிதம் கொள்ளும் புகழ் மறவர் படையெடுப்பு என்றால், அஞ்சிட மாட்டார்கள் அல்லவா? அஞ்சுவது அஞ்சாமை பேதமை ஆகிவிடுமா?

இத்தகைய இக்கட்டான நிலையில் உதவுவதற்காக பாண்டிச்சேரியிலுள்ள பிரஞ்சு நாட்டு கவர்னரை சேது மன்னர் எற்கெனவே அணுகியிருந்தார்.[1] அன்றைய தமிழக அரசியலில் ஆங்கிலேயருக்கு எதிர் அணியாக அரசியலில் போட்டியிட்ட வர்கள் பிரஞ்சுநாட்டவர். ஆற்காட்டு நவாப் அரசு கட்டிலுக்கு போட்டியிட்ட சந்தா சாகிப்பிற்கு பெரும் இராணுவ உதவி வழகி திருச்சி முற்றுகைப் போரில் ஆங்கிலேயருடன் நேரடி


  1. Kuthirvol. S. Dr. History of Marawas (1700-1800), р. 2.21.