பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

எஸ். எம். கமால்

யாக பொருதியவர்களும் அவர்களே[1] அன்றைய தன்னரசுகளாக விளங்கிய தஞ்சை மன்னரிடமும், ஹைதராபாத் நிசாமிடமும், மைசூர் திப்பு சுல்தானிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களும் அவர்களே. மறவர் சீமையைப் பொறுத்தமட்டில், பிரஞ்சுக்காரர்கள், விஜயரகுநாத சேதுபதி மன்னர் (கி. பி. 1710-1720) காலம் தொட்டு தொடர்பு வைத்திருந்தவர்கள் கமுதிக் கோட்டையை உருவாக்கி அமைத்துக் கொடுத்தவர்கள் பிரஞ்சு நாட்டு வல்லுநர்கள் ஆகும்.[2] உலகப் புகழ்பெற்ற இராமேஸ்வரம் திருக்கோயிலின் நீண்டு சிறந்த மூன்றாம் பிரகார வடிவமைப்புக்கும் பிரஞ்சு நாட்டுப் பொறியாளர்கள் உதவியிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியிலிருந்து, பிரஞ்சு நாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மான்ஷியர் வெல்கோம்ப் மூலம் பிரஞ்சு சக்கரவர்த்தியுடன் பெற்றிருந்த இராஜியத் தொடர்புகளை சுட்டிக்காட்டி நவாப்பிடமிருந்து, மறவர் சீமையில் அரசியல் ஆக்கிரமிப்பை அகற்ற இராணுவ அணியும், வெடி மருந்து வசதிகளையும் கோரி மன்னர் தமது பிரதிநிதியாக மயிலப்பன் சேர்வைக்காரரை பாண்டிச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆளுநரிடம் அனுப்பி வைத்தார்.[3] இந்த இரகசிய நடவடிக்கைக்கு பிரஞ்சு நாட்டு ஆதரவு இருந்தது. ஆனால் உருப்படியான உதவிகளைப் பெறுவதில் தாமதம் நீடித்தது. ஒரு வேளை அப்பொழுது பிரஞ்சு நாட்டில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியல் குழப்பங்கள் ஆகிய அசாதாரண சூழ்நிலைகள்பிரஞ்சு ஆயுத அணி, மறவர் சீமைகள் நுழைவதற்கு இடர்ப் பாடாக இருந்திருக்க வேண்டும்.!

இதற்கிடையில், மறவர் சீமையின் ஆதிக்கத்தை மிகுந்த பிரயாசையுடன் கி. பி. 1772-ம் ஆண்டு படையெடுப்பின் மூலம் நிலைநாட்டிய நவாப் முகமது அலி, அதனை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஒரு உடன்படிக்கையின் மூலம்


  1. Robert Oorme, Military Transactions in Indoostan, Vol. I, (1861), p. 200.
  2. Rajaram Row, T., Ramnad Manual (1891) p. 180
  3. Kathirvel, S. Dr. History of Marawas (1977), pp. 220-22