பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது6
சிவகங்கையும் சேதுபதியும்

அன்றைய சிவகங்கை என்பது இராமனாதபுரம் மன்னர் விஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தொன்றாகும். நாலுகோட்டை உடையாத் தேவரை இராமனாதபுரம் சீமையில் பாளையக்காரர்களில் ஒருவராக மன்னர் கிழவன் சேதுபதி நியமனம் செய்தார். முன்னுாறு வீரர்களுக்கு தளபதியாக அவரை நியமனம் செய்து, அதற்குத் தக்க நில மான்யமும் வழங்கியிருந்தார். இராமனாதபுரம் சீமை ஆட்சி உரிமைக்குப் போட்டியிட்ட சிறுவல்லி பாளையக்காரரான திரையத் தேவரது பாளையத்தை ஒட்டி நாலுகோட்டை அமைந்திருந்ததால் அதற்கு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் இருந்துவந்தது. அவரை அடுத்து வந்த விஜய ரகுநாத சேதுபதி மன்னர் உடையாத் தேவரது மகன் சசிவர்ணத்தேவருக்குத் தமது மூன்றாவது மகளாகிய அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமனம் செய்துவைத்தார்.[1] அதுவரை தமது பாளையக்காரராக இருந்து இந்த திருமணத்தின் மூலம் நெருங்கிய உறவினராகி விட்ட நாலுகோட்டைத் தேவரது அந்தஸ்தை உயர்த்துவதற்காக அவருக்கு மேலும் பல கிராமங்களை சீதனமாக வழங்கி 1,000 போர் வீரர்களுக்கு தளபதியாகப் பதவி உயர்வு அளித்தார்.[2] தளபதி என்பவர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போர் வீரர்களை அவசர காலத்தில் மன்னருக்கு அளித்து உதவும் . கடபாடு உடையவர். ஆண்டுதோறும் அந்தப் போர் வீரர்ளைப் பராமரிப்பதற்கான அளவு வருவாய் உடைய காணி


  1. Annasamy Iyer V., Sivaganga, its orgin and litigations ( I ho8). pp. 3-4
  2. hajaram Row, T., Ramnad Manual (1891), pp. 2:37-89