பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
எஸ். எம். கமால்
 

வதாகவும் வாக்களித்தார்.[1] ஆனால் பிரதானி தாண்டவராய பிள்ளை உடல் நலிவுற்று இறந்து விட்டதால், அரசியாரது அந்தரங்கப் பணியாளர்களான மருது சகோதரர்கள் ஹைதரலியின் படை உதவியுடன் கி. பி. 1780-ல் சிவகங்கைக் கோட்டையை ஆற்காட்டு நவாப்பின் கூலிப்படைகளிடமிருந்து மீட்டனர். அரசி வேலுநாச்சியாரை சிவகங்கைச்சீமையின் அரசியாக அறிவித்து அவரது பிரதானிகளாகப் பணியேற்றனர்.[2] நாளடைவில் விதவையான ராணி வேலுநாச்சியாருக்கும் வெள்ளை மருதுவிற்கும் ஏற்பட்ட நெருக்கமான உறவு சிவகங்கை அரசியலில் விபரீதத்தை விளைவித்தது. அரசியார் பெண் என்ற பலவீனத் தைப்பயன்படுத்தி. தாங்களே சிவகங்கைச் சீமையின் ஆட்சியாளர்களாக மருது சகோதரர்கள் இயங்கி வந்தனர். அரண்மனையில் அடிமைப் பணிபுரியும் பெரிய மருது, அரசியாரை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்தது மறவர் இன மக்களிடம் மனக் கொதிப்பை ஏற்படுத்தியது, அண்டை நாடான பெரிய மறவர் சீமையின் சேதுபதி மன்னருக்கு மருது சகோரர்களது நடவடிக்கைகள் அதிர்ச்சியை அளித்தன.[3]

இவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு மிகுந்ததால், நாளடைவில் அரசியாரது தலைமையை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படத் தொடங்கினர். இதனால் சிவகங்கைச்சிமை அரசியலில் அவநம்பிக்கையும் கருத்து வேறுபாடுகளும் வளர்ந்தன. மக்களிடையே அரசியை ஆதரிப்பவர்களும், பிரதானிகளை பின்பற்றுபவர்களுமாக இரு பிரிவுகள் ஏற்பட்டன, பிரதானி சின்ன மருதுவின் அடாவடியான நடவடிக்கைகளால் அரசியார் வெறுப்பும் வேதனையும் அடைந்தார். அதனால் தமது ஆட்சியையும் அதிகார வரம்பையும் உறுதிப்படுத்த முயன்றார்.[4] இதனைத் தொடர்ந்து அரசியாரது ஆதரவாளர்களுக்


  1. Military Country Correspondence, Vol. 21 (1772), р. 282
  2. Kathirvel. S. Dr. History of Marawa (1977), p. 166
  3. Dr. S. Kathirvel. History of Marawa (1972), p. 168
  4. Military Country Correspondence, Vol. 129. C, 9–5–1789 p. 1461