பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

53

கும் பிரதானியைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அரசியாரது உதவிக்கு ஆற்காட்டு நவாப்பின் படைகள் ஓடிவந்தன.[1] சிவகங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட மருதுவின் ஆதரவாளர்கள் திருப்பத்துார் கோட்டைக்கும், காளையார்கோவில் கோட்டைக்குமாக சிதறி ஓடினர். ஆற்காட்டுப் படைகளும் கும்பெனியார் படைகளும் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களை மைசூர் அரசின் பகுதிக்குள் விரட்டினர். சிவகங்கையில் அரசியாருக்கு ஆதரவான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு, நவாப்பின் படைகள் திருச்சிக்கும், மதுரைக்கும் புறப்பட்டுச் சென்ற பின்னர், மருதுவின் படைகள் மீண்டும் சிவகங்கையைக் கைப்பற்றின. இந்த இழுபறி தொடர்ந்து கொண்டே இருந்தது.[2]


இந்த நடவடிக்கைகளையெல்லாம் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மிகுந்த அக்கறையுடன் கவனித்துவந்தார் அவரது உள்ளத்தில் வேதனை நிறைந்தது. தமது பெரிய பாட்டனரான விஜய ரகுநாத சேதுபதி நாலுகோட்டைத் தேவருக்கு கொடுத்த சீதனச் சொத்து சிவகங்கை. அதன் அரசியல் சீரழிவை அவரால் எவ்விதம் சகித்துக் கொள்ளுவது? விர மறக்குடி வழியினரான தமது உறவினர் இராணி வேலுநாச்சியாரை, அவரிடமே அடிமைகளாக இருந்த மருது சேர்வைக்காரர்கள் ஆட்டிப் படைப்பதா? இத்தகைய இனவாத உணர்வுகள் அவரது இதயத்தில் மேலெழுந்து நின்றன. அத்துடன் அப்பொழுதைய ஆண்வாரிசு இல்லாத சிவகங்கைச் சொத்திற்கு தாமே சரியான வாரிசு என்ற பொய்மையான நியாயமும், அவரது சிந்தனையில் உருவாகி நின்றது. ஆதலால் மறவர் சீமையை மீண்டும் ஒன்றுபடுத்த வேண்டிய உயர்ந்த நோக்கத்தை ஆற்காட்டு நவாப்பிற்கு விளக்கமாக எழுதி சிவகங்கைச் சீமையையும், தமது ஆட்சி வரம்புக்குள் அமைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். அந்தப் பகுதிக்கான பேஷ்


  1. Military Country Correspondence, Vol. 128, 17-3-1789, р , 28:), p, 1459
  2. MIlitury Country Correspondence. Vol. 155, 24-1-1702, p. 414