பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
57
 

தையும் உடனுக்குடன் மன்னர் கவனித்ததுடன், சிவகங்கையாரின் சிறுமைச் செயல்பற்றி கும்பெனியாரின் பிரதிநிதியான கலெக்டர் லாண்டனின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.[1]


இவை போன்று அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் உணர்ச்சி வசப்பட்ட இரு தரப்பினரின் நிலைகளில் பல மோதல்கள் உருவெடுத்தன. எல்லைப்பகுதி ஒன்றிலே உள்ள புஞ்சைக் காட்டின் விளைச்சலை அறுவடை செய்து எடுத்துவரும் பொழுது சிவகங்கையார் அந்த நிலம் தங்களது சீமையைச் சேர்ந்தது என உரிமை கொண்டாடி அறுவடை மகசூலை பறித்துச் சென்றனர். துணிகரமான முறையில் நடந்து கொண்ட இந்த தீய நடவடிக்கைக்கு மாற்று நடவடிக்கையாக இராமனாதபுரம் ஆட்கள் அன்று இரவே அந்தக் கிராமத்தைச் சூறையாடினர். அங்கு வந்த மருது சகோதரர்களின் மக்கள் இராமனாதபுரம் மறவர்களில் சிலரைக் கொன்று எஞ்சியவர்களை தங்களது எல்லையினின்றும் துரத்தி அடித்தனர்.[2] இதே போன்று இன்னொரு நிகழ்ச்சி. தொண்டியை அடுத்த சோழியக்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இராமநாதபுரம் வீரர்கள் ஐம்பது கிராமங்களை சூறையாடி குடிகளைக் கொன்று 20,000 கலம் நெல்லையும் கால்நடைகளையும் கடத்திச் சென்றதாக சிவகங்கையாரின் வக்கீல் சங்கரலிங்கம்பிள்ளை கும்பெனி துரைத்தனத்தாரிடம் புகார் செய்தார்.[3]

மற்றுமொரு அவமானமானச் செயல் பற்றி சின்ன மருது சேர்வைக்காரரே, கும்பெனி கலெக்டருக்கு புகார் ஒன்று அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் சுருக்கமாவது.[4] சிவகங்கையைச் சேர்ந்த பாண்டுகுடி கிராமத்தில் சிவகங்கைச் சேர்வைக்காரரது பணியில் இருந்த குப்பமுத்து என்பவர், மருது சேர்வைக்காரர்களுக்கு பயந்து பக்கத்தில் உள்ள இராமநாதபுரம் சீமையில் தஞ்சமடைந்தார். அவருடைய இரண்டு மாடுகள் பாண்டுகுடி


  1. Military Country Correspondence, Vol. 45, 30-6-1794, р. 230
  2. Military Consultations, Vol. 185-B, 29-8-1794, p. 4060
  3. Military Consultations, Vol. 185-B, 3-6-1794, p. 2157
  4. Military Consultations, Vol. 191, 7-12-1794. p. 5098-99