பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

59

ஆடுகளையும் கொள்ளைப் பொருளாக எடுத்துச் சென்றனர். பட மாத்துார் அய்யாத்தேவர் மகன் கவண்டத் தேவர் தலைமையில் இந்தக் கொள்ளை நீடித்தது.[1] தெற்கிலும் மேற்கிலும் தாக்கப்பட்ட சிவகங்கைப் படைகள் வீரத்துடன் போரிட்டு நிலையையை சமாளித்தனர்.

அடுத்து, இராமநாதபுரம் சீமையைச் சேர்ந்த சம்பிரிதி ஒருவர். அரசரது கடுமையான நடவடிக்கைக்குப் பயந்து சிவகங்கைச் சீமை கிராமம் ஒன்றில் தஞ்சம் புகுந்தார். மன்னரது வீரர்கள் அந்தக் கிராமத்துக்குள் புகுந்த அந்த அலுவலரை பிடித்து பிணைத்து அரசரிடம் அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக கும்பெனியாரது தலையீட்டையும் புறக்கணித்து மன்னர் அந்த அலுவலரை பொது இடம் ஒன்றில் நிறுத்தி கசை அடி தண்டனை வழங்கினார்.[2] இன்னொரு நிகழ்ச்சியில் பாமக்குடியிலிருந்த அரசருடைய போர் வீரர்கள் பக்கத்துாரான நெட்டுரில் புகுந்து, சிலரைக் கொன்றதுடன், குடிசைகளையும் கொளுத்தினர். அந்த ஊர் நாட்டாண்மையின் தலையைத் துண்டித்து இராமநாதபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். தங்களுடைய சீமையில் துணிகரமாகப் புகுந்த இந்த மறவர்களை பழிவாங்க முனைந்த பெரிய மருதுவின் மக்கள் மூவரில் ஒருவர் இராமநாதபுரம் வீரர்களால் களபலி ஆக்கப்பட்டார். எஞ்சிய இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டன. செய்தியை அறிந்து, ஆத்திரம் அடைந்த பெரிய மருது சேர்வைக்காரர், இராமநாதபுரம் வீரர்களைத் தொடர்ந்து வந்து, பரமக்குடியில் புகுந்து 700 பேரைக் கொன்று குவித்துவிட்டு சிவகங்கை திரும்பினார்.

இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ணுற்ற கலெக்டர் மக்லாயிடு சென்னைக்கு அனுப்பி வைத்த அறிக்கையில்.[3]


  1. Military Country Correspondence, Vol. 45, (1794), p. 153
  2. Military" Consulations, Vol. 185, B, 21-6-1794, pp. 2756
  3. Lottor from Collector Macleoid D., 21-6-1794, Fort St. Gnorgo Diary Consultations, p. 2757