பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



7
எரிமலை புகைந்தது

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க சுாலம் முதல் இந்த நாட்டின் செல்வ வளங்களை தமது நாட்டு வாணிபப் பொருளுக்கு ஈடாகப் பெற்றுச் செல்வதற்காக பரங்கிகள் இங்கு வந்தனர். இந்த முயற்சியில் முதலிடமாக. தமிழ்நாட்டின் தென்கோடியிலுள்ள துத்துக்குடிக்கு போர்ச்சுக்கீசியர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தரங்கம்பாடியில் டச்சுக்காரரும் புதுச்சேரியில் பிரஞ்சுக்காரருடம். நிலை கொண்டனர். அவர்களை அடுத்த வந்த ஆங்கிலேயர், கி. பி. 1539-ல் சென்னைக் கடற்கரையை ஒட்டி பண்டகசாலை ஒன்றையும், கோட்டையையும் அமைத்தனர். ஆற்காட்டு நவாப்பின் ஆதரவுடன் தென் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அப்பொழுது தமிழ் நாட்டு நெசவாளிகள் உற்பத்தி செய்த கைத்தறித் துணிகளை கொள்முதல் செய்து இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலுமுள்ள சந்தைகளுக்கு அனுப்பி வந்தனர்.

இந்த வியாபாரத்தைக் கண்காணிப்பதற்காக அவர்கள் அமைத்த சென்னைக் கோட்டையில், போர்டு ஆப் டிரேடு என்ற வாணிபக் கழகம் செயல்பட்டு வந்தது. அதன் மேற்பார்வையில் நாகூர், பாளையங்கோட்டை, இராமனாதபுரம் ஆகிய ஊர்களில் கமர்ஷியல் ரெஸிடெண்டு (வர்த்தகபிரதிகள்) என்ற அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து லிருந்து தூத்துக்குடி வரையிலான தமிழ்நாட்டுக் கடற்கரை, அப்பொழுது சோழ மண்டலக்கரை என அவர்களால் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகளுக்கு மேல்நாடுகளில் நல்ல கிராக்கி இருந்தது. தமிழ் நாட்டின் 'Printed Calicos', வங்காளத்தின் மஸ்லின்கள் "Evening Due”, “Textile Breeze”. “Running water" என்று விரும்பி அழைக்கப்பட்ட மஸ்லின் துணிவகைகளும் நாட்டின் இதர