பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
VI

கொண்டு எழுகிறோம், உள்ளம் துடிக்கிறது. சேதுபதி மன்னரின் உடைமையை கும்பினிப் பரங்கியர் எப்படி எல்லாம் சூறையாடினார்கள் என வடித்துள்ள பகுதி குறிக்கத்தக்கது.

தமிழில் ஆராய்ச்சி மிகுந்த நல்ல வரலாற்று நூல்களை எழுத முடியும் என்பதை இவ்வாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் இவரது ஆராய்ச்சித் திறனைப் பாராட்டுகிறேன். அண்மையில் ஆராய்ச்சித் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் இதைத்தலைச் சிறந்த நூல் எனக் கருதுகிறேன்.

ஆசிரியர் இதுபோன்று பல நூல்களைப் படைப்பின் தமிழ் வரலாறு சிறப்புறும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வெளிக் கொணரும் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இரா. நாகசாமி