பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

எஸ். எம். கமால்

தங்களது தொழில் மையம் ஒன்றை துவக்கி கைத்தறி துணிகளை, முழுதுமாக கொள்முதல் செய்யும் திட்டம் ஒன்றை அவர்கள் தீட்டினர். கி.பி. 1792 டிசம்பரில் அங்குள்ள தறிகளையும், அவைகளின் உற்பத்தி விபரங்களையும் சேதுபதி மன்னருக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக சேகரித்து அனுப்பிய கடிதத்தில், இராமநாதபுரம் பருத்தித்துணிகளுக்கு கூடுதலாக கோரப்பட்டுள்ள விலைகளை ஏற்றுக்கொள்ளாமல் இராமநாதபுரத்தில் கைத்தறித் துணி உற்பத்திக்கு முதலீடு செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.[1] அத்துடன் அப்பொழுது நாகூரில் கும்பெனியாரது வர்த்தகப் பிரதிநிதியாக இருந்த மைக்கேல் என்பவரை மறவர் சீமைக்கு அனுப்பி அங்குள்ள நெசவுத்தொழில் பற்றிய நிலையை நேரில் அறிந்து வருமாறு செய்தனர். அவரும் நாகூரில் இருந்து கடல் மார்க்கமாக தேவிபட்டினம் துறைமுகத்தில் 24-1-93-ல் கரை இறங்கினார். இராமநாதபுரம் சீமையில் உள்ள நெசவாளர் குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டு 12-2-1793-ம் தேதியன்று சென்னை கவர்னருக்கு விரிவான அறிக்கையொன்றை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையில் இராமநாதபுரம் சீமையின் கிழக்கு, மேற்கு வடக்குப் பகுதிகளில் உள்ள 800 தறிகளில் உற்பத்தியாகின்ற நெசவுத் துணியின் அளவு, அவை அனைத்தும் இராமநாதபுரம் மன்னருக்கோ அல்லது பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சுக்காரர்களுடைய ஏஜண்டுகளுக்கோ கிடைக்காமல் செய்து கிழக்கு இந்தியக் கம்பெனிக்கு கிடைப்பதற்கான வழிமுறைகளையும் அதில் கோடிட்டு காண்பித்து இருந்தார். அவ்விதம் செய்வதினால் இராமநாதபுரம் சீமையின் நெசவு தொழிலில் புதிய உத்திகளைப் புகுத்தி நெசவின் தரத்தையும் உயர்த்துவதுடன் நெசவாளர்களது நிலையிலும் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்றும், அதன் காரணமாக இராமநாதபுரம் சீமையில் மட்டும் ஆண்டு தோறும் நானுாறு முதல் ஐந்நூறு பொதிகள் கைத்தறித் துணிகளைக் கொள்முதல் செய்வதன் மூலம் ஏனைய வெளிநாட்டார் இத்துறையில் கொண்டுள்ள வணிகத் தொடர்புகளை தடுத்து நிறுத்திவிட முடியும் என்றும் உறுதிபட வரைந்து இருந்


  1. Revenue Consultations, Vol. 50, 1793, pp. 657-58. 2. Public Consultations, Vol. 182-A, 12-2-1793, pp. 852-862