பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

எஸ். எம். கமால்


சேதுபதியின் துறைமுகமாகிய பாம்பனில் இறக்குமதி செய்யப்படுகிற பொருள்களுக்கு எவ்வித சுங்கவரியும் கிடையாது.


இன்னும், இவைபோன்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பை கலெக்டர் லாண்டன் இராமநாதபுரம் மன்னரிடம் கொடுத்து அவரது ஒப்புதலுடன் சீமை முழுவதும் பிரசித்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனைப் பரிசீலித்து தமது பதிலை அளிப்பதாக அரசர் சொல்லிவிட்டார். கலெக்டரும் அரசரது ஒப்புதலைப் பெறுவதற்காக இராமநாதபுரத்தில் ஒரு வாரம் காத்திருந்தார். பொறுமையிழந்த கலெக்டருக்கு மன்னரிடமிருந்து வந்த முரண்பாடான பதில் ஏமாற்றத்தை அளித்தது முதலில் கும்பெனியாரது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தி விட்டு பிறகு தமக்குள்ள சிரமங்களை கவர்னருக்கு அறிவிக்குமாறு மன்னரை கலெக்டர் வற்புறுத்தினார். அறிவிப்பில் கண்டுள்ளவை தமது நிர்வாகத்திற்கு இடையூறானவை என்று தெரியப்படுத்திவிட்டு கும்பெனியாரது உத்திரவை அமுல்படுத்த மன்னர் மறுத்துவிட்டார்.[1] இதனால் பெரிதும் வெறுப்படைந்ததாக 31-3-1793-ந் தேதி கவர்னருக்கு எழுதிய கலெக்டரது கடிதத்தின் வாசகம் தெரிவிக்கிறது.[2] அரசருக்கு தகுந்த கல்வி ஞானம் இல்லாத காரணத்தினாலும், தமது ஊழியர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் சேதுபதி மன்னர் செயல்படுவதாகவும், கும்பெனியாரிடமும் ஏனைய ஐரோப்பியரிடமும் மிகுந்த வெறுப்புடன் நடந்து கொள்வதாகவும் அதன் காரணமாக அவரது அலுவலர்கள் அனைவருமே பரங்கிகளிடம் அதே வெறுப்பு உணர்வைக் காட்டுவதாகவும் அறிவித்திருந்தார். தமது எண்ணத்தை எதிர்க்காத தமது இனத்தவரும், பணியாளர்களும் சூழப்பெற்ற அரசர், தமக்கென சுதந்திரமான பொய்மைச் சிந்தனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த மடலில் குறிப்பிட்டி ருந்தார், நல்ல வேளையாக அந்த கலெக்டர் கும்பெனியாரது பணியில் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. !

சுங்கம் மூலமான வருவாயும் வரிவிதிப்பும் இல்லாது எந்த அரசும் செயல்பட முடியாது என்ற உண்மையை ஆங்கிலேயர்


  1. Revenue Consultations, 50 A (1793), pp. 586, 87
  2. Ibid pp. 552-78