பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

69

அறியாதவர்கள் அல்ல. என்றாலும், மறவர் சீமையின் கைத்தறித் தயாரிப்பு முழுவதையும் தாங்களே பெற்றுக் கொள்ளை இலாபம் அடித்து, இலாபக் கொள்ளையை இங்கிலாந்திற்கு ாடுத்து செல்ல வேண்டும் என்பது அவர்களுடைய பேராசை, ஆற்காட்டு நவாப் வழங்கிய அரசியல் ஆதிக்கம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்கள் அரசரை பயமுறுத்திப் பாத்தனர். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுவது இல்லை என்பதை அறிந்த பின்னர், அரசரது எதிர்ப்பு காரணமாக தொழில் மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டனர். ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நேரத்தை மீண்டும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்!

வடக்கே வங்காளத்தில் தங்களது நிலையை நிரந்தரப்படுத்திக் கொள்ள கும்பெனியார் அங்கிருந்த நவாப் சுராஜ் உத்தெளலாவிற்கு எதிராக அவரது உதவியாளர்களையே ஐந்தாம் படையாக உருவாக்கினர். மீர் ஜாபர், மீர் காசிம் என்ற அந்த பொம்மைகளைக் கொண்டே மாற்று அரசினை எற்படுத்தி அதற்கு கூலியாக அவர்களிடம் லட்சக்கணக்கான ருபாய்களை லஞ்சமாகப் பெற்றனர். அத்துடன் வங்க மாநிலத்தையும் தானமாகப் பெற்று, இந்த நாட்டில் ஆக்கிரமிப்பிற்கு அடித்தளம் இட்டனர்.[1] இத்தகைய ராஜதந்திரத்தில் சிறந்த அதே கும்பெனியார் தமிழகத்தில் அப்பொழுது இருந்த இரண்டு தன்னரசுகளில் ஒன்றான மறவர் சீமையை அடிமைப்படுத்த சேதுபதி மன்னரது பிரதானியை, அவருக்கு பாதகமாகப் பயன்படுத்தினர். அந்தப் பிரதானி முத்து இருளப்பபிள்ளை என்பவர். முதுகுளத்துர் பகுதியில் பிறந்தவர். மேல்நாட்டுக் கல்வியில் பயிற்சியும் கும்பெனியாரது தொடர்பும் பெற்றிருந்தார். அவரை, தளபதி மார்ட்டின்ஸ் சேதுபதி மன்னரிடம் பரிந்துரைத்து கி.பி. 1782-ல் இராமநாதபுரம் பிரதானியாக நியமனம் பெற உதவினார்.[2]

மன்னரது நிர்வாகத்திற்கு நன்கு உதவிய இவர், நாளடைவில் மன்னரது நம்பிக்கையை இழந்து கும்பெனியாருக்கும் ஆற்


  1. Edmond Burke-Impeachment of Warren Hastings (London), 19 () 8, VoI. I
  2. Revenue Consultations, Vol. 62, 10–4–1795, pp. 1 268, 69