பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70
எஸ். எம். கமால்
 

காட்டு நவாப்பிற்கும் விசுவாசம் உடையவராக மாறினார். இவரைப்பற்றி சேது சமஸ்தானப் புலவர்கள் பாராட்டிப் பாடிய பாடல்களுக்குக் கூட தாம் அருகதை அற்றவர் என்பதை அவரது பிந்தைய நடவடிக்கைகள் புலப்படுத்தின. நாட்டு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மிகவும் புதியவரான இளம் மன்னருக்கு இரு கண்களாக இருந்து, பாரம்பரியம் மிக்க சேது நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அவர், தமது சுயநலத்திற்காக இராஜ விசுவாசத்தை இழந்தார். கி.பி. 1796-ல் சென்னைக் கவர்னருக்கு மன்னர் வரைந்த கடிதம் ஒன்றில் முத்து இருளப்பபிள்ளை கும்பெனி தளபதி மார்ட்டின்சுடன் கொண்டிருந்த நட்பு காரணமாக தமது நாட்டின் நிர்வாக விஷயங்களை தெரிந்துகொள்ள இயலாத வகையில் தம்மை இந்தப் பிரதானி நடத்தினார், என்ற குற்றச்சாட்டிலிருந்து அந்த உண்மை உறுதிப்படுகிறது.[1]


மேலும் அவர் சேதுபதி மன்னரது பிரதானி என்ற எண்ணமே இல்லாதவாறு மதுரைக்குச் சென்று, அங்கு கும்பெனியாரது குத்தகைதாரராக பதவிபெற்று மதுரையிலேயே வாழத் துவங்கினார். விபரம் அறிந்தபின்னர் அரசர் தமது பணியாட்களை அவரிடம் அனுப்பி அவரிடமிருந்து பிரதானிப் பதவிக்குரிய முத்திரை மோதிரத்தையும், இதரப் பொருள்களையும் பெற்று வருமாறு செய்தார்.[2] பின்னர் மதுரையில் மிகக் கொடுரமான, அடாவடியான நடவடிக்கைகளுக்கு அவர் காரணமாக இருந்ததுடன், மேலுார் கள்ளர்கள் அசம்பாவிதமான செயல்களில் ஈடுபடுவதற்கு அவர் தூண்டுதலாகவும் இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மதுரைக் கலெக்டரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[3] மீண்டும் இராமநாதபுரத்திற்கு திரும்பிய அவர், தளபதி மார்ட்டின்சின் பாதுகாப்பில் இருந்து கொண்டு சமஸ்தானம் சம்பந்தப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை ஒப்படைக்காமல், காலம் கடத்தி வந்தார். சென்னையிலுள்ள கும்பெனியாரது தலைமையிடத்திற்கும், ஆற்காட்டு நவாப்பிற்


  1. Revenue Consultations, Vol. 62, 10-4-1795, p. 1268, 69
  2. Revenue Consultations, Vol. 62, 10–4–1795, p. 69
  3. Alexandar Nelson, Manual of Madurai Country. Vol. V, p. 112.