பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

71

கும், இராமநாதபுரம் மன்னர் இது சம்பந்தமாக பல ஒலைகள் அனுப்பியும் பலன் எதுவும் ஏற்படவில்லை.


மன்னரது மூத்த சகோதரி மங்களேஸ்வரி நாச்சியார் அரசுப் பதவிக்கு போட்டியிட்டு மன்னருக்கு எதிராக கவர்னரிடம் அளித்துள்ள புகார் மனுவில் பிரதானி முத்து இருளப்பபிள்ளையப் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தமது பணியை அவர் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் நிறைவேற்றவில்லை என்றும், வரவு செலவுக் கணக்குகளை ஒப்பைடக்கவில்லை என்றும், மோசடி மூலமாகச் சேர்த்துள்ள அரசுப்பணத்தை இப்பொழுது விண்செலவு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.[1] அதிகாரபூர்வமான இத்தகைய புகார்களையெல்லாம் முத்து இருளப்பபிள்ளைக்குக் கிடைத்த சிறந்த சான்றிதழ்களாக கருதி மீண்டும் அவருக்கு தக்க பதவி அளிக்குமாறு தளபதி மார்ட்டின்ஸ் கவர்னருக்குப் பரிந்துரைகள் அனுப்பிக் கொண்டிருந்தார்.[2] அத்துடன் சேதுபதி மன்னர் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்வதாக புனைந்து உரைத்த அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார்.[3] ஏற்கெனவேயுள்ள எதிரிகளையும் சேர்த்து இப்பொழுது சேதுபதி மன்னருக்கு இவர்களும் புதிய வில்லன்களாக ஏற்பட்டனர். அவர்கள் வைத்த வத்திகள் பல வழிகளிலும் வேகமாக பற்றி எரியத் தொடங்கின.


ஆனால், இவர்களையெல்லாம் சேதுபதி மன்னர் பொருட்படுத்தவில்லை. தமது நலன்களைக் காக்க கும்பெனியாருடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். முத்திருளப்ப பிள்ளை, பிரதானியாக இருக்கும்பொழுது செய்த அனாவசியமான செலவுகளுக்கு அவரது முகாந்திரத்தை பெற வேண்டியதிருப்பதால் அவரை கும்பெனியாரது பாதுகாப்பிலிருந்து தம்முடைய வீரர்களது காவலுக்கு மாற்றிக் கொடுக்கு


  1. Revenue Consultations, Vol. 63 B, 23-3-1795, p. 1282, 83
  2. Military Country Correspondence. Vol. 45, 27-8–1794. p. 333–38
  3. Military Consultations, Vol. 174, (1793), pp. 1688-95