பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
எஸ். எம். கமால்
 

மாறு கவர்னரைக் கோரினார்.[1] இந்த கோரிக்கைக்கு இணங்காமல் பிரதானியை பத்திரமாக பாதுகாப்பதற்காக தங்களது காவலில் வைத்திருப்பதாகவும், அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டு விட்டால் அவருக்குரிய தண்டனை வழங்கப்படும் என்றும் அரசருக்கு கும்பெனியார் சமாதானம் சொல்லினார்.[2] வரவு செலவுக் கணக்குகளை நேர் செய்வதில் ஓராண்டு காலமாக காலம் கடத்தி வருவதாகவும், அரசுப் பணியாளர்களை அவமரியாதையான முறையில் பேசிவருவதாகவும் முத்து இருளப்ப பிள்ளைப் பற்றி மீண்டும் மன்னர் குறை கூறி கவர்னருக்குத் தெரிவித்தார்.[3] அதற்கும் எவ்விதப் பலனும் இல்லை.


கி.பி. 1794-ல் மழை வளம் குறைந்து, மறவர் சீமை எங்கும் வறட்சி காணப்பட்டது. அதனைக் காரணமாக வைத்து கும்பெனியார் தஞ்சைச் சீமையிலிருந்து நெல்லை வர வழைத்து சிவகங்கை, இராமநாதபுரம் சீமைகளில் தானிய வியாபாரத்தில் இறங்க முற்பட்டனர். அதற்கு ஆதரவாக இறக்குமதி செய்யவிருக்கும் தானியத்திற்கு சுங்க வரிவிலக்கு வழங்க வேண்டுமென கும்பெனியார் கோரிக்கை விடுத்தனர்.[4] அவ்விதமே செய்கிறோம் என்று சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இணக்கமான பதில் கொடுத்து கும்பெனியாருக்கு நல்ல பிள்ளைகளாகி விட்டனர்.[5] ஆனால், சேதுபதி மன்னர், கும்பெனியாரது கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்தார். அவர் சிந்தனை வேறுவிதமாக செயல்பட்டது. மறவர் சீமையில் வறட்சி என்பது புதுமையான நிகழ்ச்சியல்ல. அங்கு ஆண்டு தோறும் மழை வளம் ஒரே சீராக இருப்பது இல்லை. அங்குள்ள மக்கள் அந்த உண்மையை நன்கு அறிந்து அதில் அனுபவப்


  1. Military Country Correspondence, Vol. 44. (1793). pp. 127-28
  2. Military Country Correspondence, VoI. 44, 11-4-1793, pp. 137-38
  3. Ibid., 2-4-1793, p. 127
  4. Military Consultations, Vol 182, 7–1–1794, p. 79
  5. Military Consultations, Vol. 183, 1-9-37, pp. 996-10 04