பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

எஸ். எம். கமால்

கெல்லாம் கும்பெனியார் இத்தகைய அவசர இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை ஸ்ரீவில்லிப்புத்துார் கோட்டையிலுள்ள தளபதி ஒருவர் சென்னைக்கு அனுப்பிய அவசர ஓலை ஒன்றிலிருந்து தெரியவருகிறது. அந்தக் கடிதத்தில் வறட்சி காரணமாக தானிய விலை மிக மிக அதிகமாக உயர்ந்து விட்டது என்றும் கும்பெனியாரது போர்வீரர்கள் தானியங்களை வாங்க இயலாமல் மிகுந்த அல்லலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற விபரத்தைத் தெரிவித்து இருந்தார்.[1] இந்த நிலையில் இராமநாதபுரம் மன்னர் கும்பெனியார் கோரினவாறு தஞ்சையிலிருந்து இறக்குமதியாக இருக்கும் தானியத்துக்கு சுங்கவரி விலக்கு வழங்க மறுத்து விட்டார். உடனே கும்பெனியார் ஆற்காட்டு நவாப்பை அணுகி இராமநாதபுரம் மன்னருக்கு தகுந்த உத்திரவை அனுப்பி வைக்கச் செய்து தங்களது கோரிக்கையை அங்கீகரிக்குமாறு முயற்சி செய்தனர்.[2] இதனைத் தொடர்ந்து ஆற்காட்டு நவாப்பின் கண்டிப்பான உத்திரவையும் ஏற்க சேதுபதி மன்னர் மறுத்து விட்டார். மறவர் சீமையின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கை எந்தத் திக்கில் இருந்து வந்தால் என்ன?


அடுத்து அடுத்து பல உத்தரவுகள். அதிகார ஆர்ப்பாட்டங்கள், மிரட்டல்கள், எதனையும் சேதுபதி மன்னர் செவிமடுக்கவில்லை. பொருட்படுத்தவில்லை.[3] இதற்கிடையில் சிவகங்கைச் சேர்வைக்காரர்கள் இராமநாதபுரம் சீமையின் வடமேற்குப் பகுதிகளில் புகுந்து நடத்தி அத்துமீறல்களை விரிவாக எடுத்துரைத்து அவர்களை ஒடுக்குவதற்கு உதவியாக சிவகங்கைச் சீமையை தமது மேற்பார்வையில் மாற்றி உத்தர விடுமாறு கும்பெனியாரை மன்னர் கோரினார்.[4] இந்த கோரிக்


  1. Military Miscellaneous Book, Vol. 41, 31-5-1794, pp. 527
  2. Military country correspondence, Vol. 45, 7-3-1794, pp. 2729
  3. Military Consultations, Vol. 184, 25–3-1794, pp. 1236-70
  4. Military Country Correspondence, Vol 45, 6-5-1894, pp. 101-104