பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எஸ். எம். கமால்


இராமநாதபுரம் படைகள் தங்களது சீமைக்குள் புகுந்து மக்களது உயிருக்கும் உடலுக்கும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாக சிவகங்கைச் சேர்வைக்காரர்கள், கும்பெனியாருக்கும் நவாப்பிற்கும் பலமுறையீடுகளை அனுப்பிவைத்தனர்.[1] கும்பெனியாரது ஒற்றனான மார்ட்டின்சும் இராமநாதபுரம் மன்னருக்கு மேல் இடத்து உத்தரவுகளை மதித்து நடக்கும் மனோபாவம் இல்லை என்று தெரிவித்து இருந்ததுடன் இப்பொழுதைய பூசல்களுக்குக் காரணம் சிவகங்கைச் சீமையை மீண்டும் இராமநாதபுரத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற சேதுபதி மன்னரது இடைவிடாத எண்ணந்தான் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தான்.[2] இத்தகைய பயனற்ற பிரமையில் ஈடுபட்டுள்ள சேதுபதி மன்னரிடமிருந்து அறியாமையையும் கொடுமை மிகுந்த அட்டுழியங்களையும் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும் என்று தனது கணிப்புக்களை அவன் இன்னொரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.[3]

தொடர்ந்து சேதுபதி மன்னருக்கும் சிவகங்கைச் சேர்வைக்காரர்களுக்கும் நவாப் அறிவுரைகள் அனுப்பி வந்தார். அவர்கள் இருவரும் தங்களது வன்செயல்களைத் தவிர்த்து அமைதிப் போக்கை கைக்கொள்ள வேண்டும் என்பது அவரது அறிவுரைகளின் சுருக்கமாகும்.[4] ஆனால் அதே சமயம் கும்பெனி கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடங்காப்பிடாரியான' சேதுபதியை சிறையில் வைத்து விட்டால் மறவர் சீமையின் சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்ற கருத்தையும் அவர் குறிப்


  1. Military country correspondence, Vol. 45, 12-6-1794. 19-7-1794 pp. 108-200, 234-238.
    Military, consultations, Vol. 186, 17-6-1794, pp. 2348-420
  2. Military consultations, Vol. 187, 4-7-1794, pp. 2948-67
  3. Military consultations, Vol. 186, 21-6-1794, р. 2757-60
  4. Military country correspondence, Vol. 45, 3-7-1794, pp. 201-203