விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
77
பிட்டிருந்தார்.[1] தங்களது தலைமை நிலையமான கல்கத்தாவிற்கு இந்த விவரங்களைத் தெரிவித்த கும்பெனியார் மேல் நடவடிக்கை பற்றிய ஆலோசனைகளைக் கோரினார். சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் தண்டித்து ஒடுக்குமாறு கவர்னர் ஜெனரலது பதில் கிடைத்தது.[2] இதற்கிடையில் ஆற்காட்டு நவாப் திருச்சிக் கோட்டையிலுள்ள தமது மகன் உம்தத்துல் உம்ராவிற்கு அவசர ஓலை அனுப்பி, இராமநாதபுரம் பேஷ் குஷ் கலெக்டரை சந்தித்து, மறவர் சீமை பிரச்சினைக்கு முடிவு ஏற்படுத்துமாறு கட்டளை பிறப்பித்து இருந்தார்.[3] அதுவரை நிகழ்ந்துள்ளவைகளை கலெக்டர் பவுனி இளைய நவாப்பிற்கு தெரிவித்து அந்த நிகழ்ச்சிகளின் பின்னணியான காரணங்களையும் விளக்கிக் கூறினார். சிவகங்கைச் சேர்வைக்காரர்களின் நடவடிக்கைகளில் உள்ள அநீதிகளை அவர் சுட்டிக் காண்பித்ததுடன், அவர்கள் கும்பெனியாரது கட்டளைகளைப் பெற்றவுடன் அவைகளுக்கு கட்டுப்பட்டு பணிந்துள்ள நிலையையும், இராமநாதபுரம் மன்னர் கும்பெனியாரது கட்டளைகளுக்குப் பிறகும் சிறிதுகூட அடக்கமும் பணிவும் இல்லாமல் தங்குதடையற்ற அடாவடித்தனத்தில் ஆழ்ந்து இருப்பதையும் இளைய நவாப்பிற்குத் தெரிவித்தார்.
மேலும், இந்த இருதரப்பினருக்கு இடையே எழுந்துள்ள பிணக்கு, பூசல்களுக்கு ஆதாரமான சிக்கல் அப்படியே முடிவு பெறாமல் இருந்து வருவதாலும், சேதுபதி அரசரது சுயேச்சையான மனோபாவம், சுதந்திரமான செயல்முறை ஆகியவைகளிலிருந்து-அவரது போக்கில் மாற்றம் ஏதும் ஏற்படும் என தமக்கு நம்பிக்கையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தார். அத்துடன் இராமநாதபுரம் அரசரால் எந்தச் சூழ்நிலையிலும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்களை களத்தில் இறக்கிவிடும் வாய்ப்பு