பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

81

பஞ்சம் பிழைப்பதற்கு குடி மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களை விட்டு வெளியேறினார்கள். எங்கும் புல், பூண்டுகூட காணப்பட வில்லை. பொது மக்களுக்கும் குடிமக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் இல்லை. கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணிரும் பருகுவதற்கு தகுதியற்ற உவர்நீராக இருந்தது. தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள அரிசிதான் மக்கள் உயிரைக் காத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு ராணுவப் படையெடுப்பை மேற்கொண்டால் குதிரைப்படை அணிக்கும், பாரவண்டி மாடுகளுக்கும் தீவனத்திற்கு என்ன செய்வது என வினவி இருந்தார்.[1] கும்பெனியார் தங்களது இரகசியத் திட்டத்தை அப்பொழுது மேற்கொள்ள முனைய வில்லை. அங்கு மழைவளம் ஏற்படும் வரை காத்து இருந்தனர்.

ஆதலால் இராமநாதபுரம் சீமை மீதான கும்பெனியாரது இரகசியப் படையெடுப்பு தாமதப்பட்டது.


  1. Military Consultations, Vol. 188 A, 21-7-1794, pp. 8302-08