பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8



வஞ்சகத் தாக்குதல்
1795-ம் ஆண்டு-ஜனவரி மாதம்

பரங்கிகள் புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களையும் விருந்துகளையும் முடித்திருந்த நேரம். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கவர்னரது அறையில் முக்கியமான கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கும்பெனியின் பொறுப்புள்ள அலுவலர்களான எட்வர்டு சாண்டர்ஸும் எர்னஸ்ட் வில்லியம் டால் போல்ட்டும் கலந்து கொண்டனர். நீண்டநேர பரிசீலனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.[1] அதுவும் ஒரு மிக முக்கியமான முடிவாக இருத்தல் வேண்டும். ஏனெனில் சிறிது நேரத்துக்குள்ளாகவே ரகசியக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட அந்தக் குதிரை அணிகள் திருச்சிக் கோட்டைக்கும் பாளையங்கோட்டைக்கும் புறப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் சென்னையிலிருந்து திருச்சி, குதிரை மூலமாக நான்கு நாட்கள் பயணத்திலும், பாளையங்கோட்டை 8 நாட்கள் பயணத்திலும், எட்டும் நிலையில் இருந்தன.

பிப்ரவரி மாதம் எட்டாம் நாள்.

வைகறைப் பொழுது. கதிரவனின் மங்கிய கதிர்கள் இன்னும் கிழக்கில் எழவில்லை. என்றாலும் அந்தக் காலை இருட்டோடு இருட்டாக இராமநாதபுரம் கோட்டையின் தென்மேற்குத் திசையிலிருந்து வந்த கும்பெனியாரின் படை அணிகள் பல, கோட்டைக்குள் நுழைந்தன. நிமிட நேரத்தில் சேதுபதி மன்னரது அரண்மனையைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆரவாரத்தினால் கண்விழித்த மக்கள் கும்பெனிப்படையின் முகத்தில்தான் விழித்தனர். யாரும் எதிர்பாராத


  1. Military Consultations, Vol. 193 A, 27–1–1759, pp. 96-106