பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திரு. தி. கு. நடராசன், எம்.ஏ., பி.டி.,

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருவானைக்கா என்னும் ஊரில் புலவர் தி. சி. குழந்தைவேலனார்-பாக்கியலட்சுமி அம்மையார் ஆகியோரின் அருமைத் திருமகனாராகத் தோன்றியவர் திரு. நடராசன்.

இளமையிலேயே மொழிப்பற்றும், கல்வியில் ஆர்வமும் கொண்டு, கவிதைபாடும் திறனும் வாய்ந்து காணப்பட்டார். முறைப்படி தமிழ் பயின்று புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1961 இல் எம்.ஏ. தேர்விலும் 1962 இல் பி.டி., தேர்விலும் அங்ஙனமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

பொதுப் பணிகளில் நாட்ட மிக உடைய இவர் இருபதுக்கு மேற்பட்ட கழகங்களிலும் மன்றங்களிலும் பங்கு கொண்டு பணியாற்றி வருகிறார்.

வேலூர் (சேலம்) கந்தசாமிக் கண்டர் கல்லுாரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ் நாடு, தின மணி, சுதேசமித்திரன், தமிழ்ச் செல்வி, குயில், தென்றல், முத்தாரம், முரசொலி, சைவமணி, திராவிடன், திராவிடநாடு மற்றும் பல இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஈழ நாட்டு ஏடுகளிலும் இவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சி வானொலி நிலையத்தில் இரண்டு முறை மொழி பெயர்ப்புப் பாடல்களை வழங்கியுள்ளார். இவருக்குக் 'குமுதன்' என்னும் புனை பெயருமுண்டு. ஈண்டு மருது பாண்டியன் வரலாற்றினை வண்ணத் தமிழ் ஓவியமாக -- கவினுறு கவிதையாகத் தருகிறார்.


——————