பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

விடுதலை வீரர்கள் ஐவர்

“குற்றமற் சொல்கின்றாய்? ஆமாம், செய்த

குற்றங்கள் பலவுண்டு; வேற்றார் உம்மை

உற்றடுத்தக் கெடுக்கவந்த உலுத்தர் என்றே

உணராத தொருகுற்றம்; எங்கள் நாட்டுள்

பற்றெடுத்த சுதநாகம் போலே, உம்மைப்

புகவிட்ட தொருகுற்றம்; உங்கள் கையை

முற்றுவிட்டுத் தவிக்கின்ற பெரிய குற்றம்

முன்னோரும் என்னேரும் செய்து குற்றம்!


“குற்றமென்று சொல்லிவிட்டாய்? எதுதான் குற்றம்?

கும்பினியார் உமதாட்சி தன்னை, யானும்

தொற்றிவரும் நோயென்று தெளிந்து தேர்ந்து

துடைத்தெறிய முனைத்தேனே, அதுவா குற்றம்?

குற்றேவேல் செய்தும்மை வாழ்த்தி, சுழைக்

கும்பிடுகள் போட்டுவர வேற்கும் ஏனைச்

சிற்றரசர்' போலன்ரறி, மணம் பேணிச்

சீறியமை எதிர்த்தேனே, அதுவா குற்றம்?


“குற்றந்தான் என்பாயேல், அதனை யானும்

குலவையிட்டு வரவேற்பேன்! இந்நாள் என்னை

ஒற்றைமுழ சிறுகயிற்றில் தொங்க விட்டே

உயிர்பறிப்பாய் என்குலும், இந்த மண்ணில்

பெற்றெடுக்கும் உடம்பெல்லாம் புகுவேன்! உம்மைப்

பேர்த்தெறிந்து விடுதலையைப் பெறுநாள் மட்டும்

குற்றமிதை தான்புரியத் தயங்க மாட்டேன்!

கெடிதுாக்கிப் போரிடுவேன்! திண்ணம்! திண்ணம்!”


கட்டபொம்மன் சூளுரையைக் கேட்டே, நெஞ்சக்

கலக்கமுற்ற கும்பினியான் ‘இவனை இன்னும்

விட்டுவைத்தால் ஆபத்தே’ என்ப தோர்ந்து

வீரனையே! தூக்கிட்டான்! எனினும் அந்த