பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
௨. மருது பாண்டியன்
[தி. கு. நடராசன், எம்.ஏ, பி.டி.,
கந்தசாமிக்கண்டர் கல்லூரி, வேலூரர், சேலம்.]


விடுதலைப் போரின்கன் விடுதலைப் பெற்றுப்புகழ்

படுதலைக் கொண்டோரைப் பாடுதலைத் தொழிலாக்கி

வரும்படி(க்கு) அழைத்த வானொலியே ! வந்துகவி

தரும்படி கேட்டுவக்கும் தமிழ்நெஞ்சே வணங்குகிறேன்


தலைவர்

தலைகொடுத்துநமக்குவிடுதலை கொடுத்தவர் கவியரங்கில்

தலைமை கொடுப்பவரோ தமிழுக்குக் கல்லக்குடியில்

தலைகொடுத்தவர்! பொதுப்பணியில் தாயகத் தமிழுக்குத்

தலைமை கொடுத்தவர்! தன்துறையில் கொண்டதைக்

கருதிச் செயலாற்றும் “கலைஞர்” எனவுரைக்கும்

பொருளாளர்! அவருக்குப் பொன்னிமகன் வணக்கம்!


தலையாடி இத் தமிழாடி! தாளாடி மாற்றான்

தலையாடிஓட மருதுவோ தமிழில் ஆடியவன்

போராடிப் போர்ஆடிப் புகழாடிக் கொண்டாடி

சீர் ஆடிப் போகாத சிறப்பாடி ஏற்றவன்

மார்கழிக்கும் வேர்வையும் மறம்கொழிக்க, வஞ்சித்தோர்

மார்கழிக்கும் மறவனவன்! மானத்தை மதித்தஊமைத்

துரையுடன் கொண்டிருந்த துணையுடன் வெள்ளைத்

துரைத்தனத்தைத் தூளாக்கிய தோளினத்தைக் கொண்

இத்தரை வேண்டி எதிர்த்தவர் அத்தழையோட இவண்

சித்திரை நெருப்பென் முத்திரை பொறித்தவன்