பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மருதுபாண்டியன்

17

மண்ணளக்க வந்தவரை விண்ணளக்க வைப்பேன்

என்னாசை இவ்வாசை என ஆசை பேசினார்க்குத்

துணையெனத் திரண்டான் தோளிரண்டில் வீரக்

கணையத்து வைரத்தைக் கட்டிவைத்து மூண்டெழுந்தான்

துரைவந்த இடம் நோக்கித் தூளாக்க ஊமைத்

துரைவந்தான் மருதோடு துணைவந்தான் எனும்படி

வேளைவந்த தென்று வேலை வேலையிலிட்டு

வாளைச் சுழற்றுமிடம் ஆளை மாய்த்திட்டான்

பழமான இதயமும் பழம்மான நெஞ்சம்

வளமாகப் பெற்றவன் வளமான உற்றவன்

வெள்ளை மருதென்றாலே வெள்ளையர்கள் கொண்ட

உள்ளம் தடுமாறும் உடம்பெங்கும் நடுநடுங்கும்

படி,சிவ கங்கைப் படியேறித் துணிவோடு

நடிக்க வந்தவரின் நாடகத்தை முடித்திட்டான்

மணிரத்தம் கொள்வார்முன் மனரத்தம் இழப்புதாஎன

பெண்,ரத்தம் தரவந்த பெண்ரத் தினம்வேலு

நாச்சியாரின் பார்வை நாற்றுக்கு விளைவாகிப்

பேச்சிழந்தும் வாளால் பேறிழக்க மறந்தானா?

முத்து வடுகநாதன் முழக்கமிட்ட மறக்களத்தில்

சத்தமிட்ட ஈட்டியால் முத்தமிட்டான் பகையை!

இரும்பிடர்த் தலையார்போல் வருமிடர்க் களைந்தவன்

கிருட்டின தேவனை விரட்டியவன் போன்றவன்

குருதி குளித்திருக்கும் கொடுவாள் கண்டு


மருது சிவந்தான்! மங்கையவளும் சிவந்தான்!

கார்வண்ணன் தான் ஆனாலும் கட்டழகன் அவளுக்கு!

போர்வண்ணன் இமயமலைப் புயவண்ணன்! எதிர்த்த

கொங்கரை விரட்டிய கோமகன் போன்றுசிவ

கங்கையைக் காத்தவன்! தம்கையை நம்பியவன்

காளையார் கோயிலைத் தாக்கிய காளையரைக்