பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

விடுதலை வீரர்கள் ஐவர்

சீமையிலே எட்டைநகர்ச்
சின்னசா மிக்குமுயர்
லட்சுமி யென்னும்
மாமயிற்கும் பிறந்ததமிழ்
மருக்கொழுந்தை நிலவெரிக்கும்
பாண்டி முத்தைச்
சேமமுறத் தெருவெல்லாம்
செந்தமிழை முழக்கவந்த
சிங்க ஏற்றைக்
கோமகனைப் பாரதியைப்
பெற்றதனால் விடுதலையில்
குளிக்கின் றோமே.
எண்சீர் விருத்தம்
வளர்ந்துவரும் இளங்கன்று முதிரா முன்னர்
வாழைமரம் சாய்வதைப்போல் இளைய முல்லைக்
கொழுந்தேறிப் பந்தலிலே படரா முன்னர்க்
கொழுகொம்பு சாய்வதைப்போல், உலகம் போற்றும்
செழுந்தமிழாய்ச் செந்தமிழை ஆக்க வந்த
சிறந்ததமிழ்ப் பாரதியார் துயர் நெருப்பில்
அழுந்திமிகத் துடிதுடிக்கப் பெற்றெ டுத்த
அன்னையொடு தந்தையரும் இறந்து விட்டார்.
சிந்து
கட்டிக் கரும்பினைச் சாறெடுத்துத் - தமிழ்க்
காவியத் தேன்கலந்து - பொன்னை
வெட்டிப் பொடி செய்து கூட்டியங்கே- காதல்
வெய்யிலில் காய வைத்தே - அன்பைக்