பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி

25

கொட்டிக் கலந்து பதமாக்கி - ஒரு
கோதை உருச் சமைத்து - சின்ன
சிட்டுக் குருவியின் பேச்சுக்களை - அவன்
சிந்தையிலே நிறுத்தி - அல்லி
மொட்டுப் பதித்து நிலாவெடுத்து - முக
மொன்று பொருத்தி வைத்து - மேலே
பட்டுடுத்திச் சிற்பி தட்டியுருச் - செய்யாப்
பாவை யென்றே யுரைத்துப் - பண்பில்
மட்டுப் படாத்தமிழ்ச் செல்வியென்றே - செல்லம்
மாளை மணக்க வைத்தார் - பிறர்
கட்டுக் கடங்காத பாரதியார் - காதற்
கட்டுக் கடங்கி விட்டார்.
எண்சீர் விருத்தம்
குற்றாலம் விட்டெழுந்து வைகை யாற்றின்
குளிர்புனலில் நீராடிச் சங்க மாய்ந்து
கற்ற தமிழ்ப் பாவலரின் நாவி லேறிக்
களிப்பூட்டி நாடகத்தைச் செய்து பின்னர்
வெற்றித்தோன் மன்னவர்க ளாட்சி செய்யும்
விதிதொறும் விளையாடி இயலி சைத்த
நற்றமிழ்த்தாய் முடிபுனைந்து செங்கோ லோச்ச
நாவரசர் பாரதியைத் தேடி வந்தாள்.
சிந்து - கண்ணி
செந்தமிழ் நூல் பயின்றார் - வடமொழி
செம்மையுறப் பயின்றார் - கங்கை
சந்திக்கும் காசி நகர் - சென்றே
இந்திமொழி பயின்ஜர்