பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

விடுதலை வீரர்கள் ஐவர்

பந்துபோல் உடலும் பகைவரை யெரிக்கச்
செந்தழற் கண்களுந் தேவை யென்றார்
கொன்றை யடித்த வெள்ளையன் சொற்களைக்
கேட்டடி பணிந்து கிடந்த மனிதரைப்
பாட்டடி கொடுத்துப் பதைக்கவைத் தாரே!


சிந்து - கண்ணி
இந்தியா என்றொரு பத்திரி கைபொறுப்
பேற்று நடத்திவந்தார் -- அதில்
சொந்த மாய்ப்பற்பல கவிதைகள் கட்டுரை
சூடாய் எழுதி வந்தார்.
கண்டனப் பாடலுங் கருத்துப் பட்டங்களுங்
காட்டிப் புரட்சி செய்தார் - அதைக்
கண்டனர் வெள்ளையர் மண்டையிடி குளிர்
காய்ச்சலுங் கொண்டு விட்டார்.
சூரத் எனுமூரில் வீரர் பலர்கூடிக்
சூழ்ந்தவோர் காங்கிரசில் - அவர்
வீரத் திலகரை நேரினிற் சந்தித்து
வீழ்ந்தவர் தாள் பணிந்தார்.
தீப்பொறி கக்குங் கருத்துக்களால் நாட்டுச்
சிங்க இளைஞர்களைத் தட்டிக்
கூப்பிட் டெழுப்பினார் வீரர்கள் யாவரும்
கொந்தளிப் போடெழுந்தார்.