பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி

31

வீரத் தமிழ்மறவன் - சுப்புரத்ன
வேந்தன் தன்னோடு
பாரதி பழகிவந்தார் -- அவனுக்குப்
பாடல் பயிற்றி வந்தார்

துப்பாக்கி யின்வயிற்றில் -- பீரங்கி
தோன்றுங் கதை போலச்
சிப்பாய் பாரதிக்கு -- நல்லதோர்
சீடன் கிடைத்து விட்டான்.


வேறு


ஏட்டில் பரங்கியர் ஆட்சிக்கெதிராகத்
தீட்டினார். - அம்பு பூட்டினார்
பாட்டில் சுதந்திர த் தீயையிந் நாட்டிலே
மூட்டினார் - அச்சம் ஓட்டினார்

கொல்லும் பசிக்குத்தம் மெல்லுடல இரை
யாக்கினார் - துயர் போக்கினார்
அல்லற் படும்போதும் ஆயிரம் பாடல்கள்
ஆக்கினார் - புகழ் தேக்கினார்

எல்லை கடந்துவந் தெங்குந்தொடர்ந்துசென்
றண்ணலைத் - தமிழ்க்கன்னலைத்
தொல்லைக்குள்ளாக்கிய போலீசுக்காரரால்
துன்புற்ருர் - ஒருபெண் பெற்றார்

பாஞ்சாலியின் கதையைத் தமிழ்ப் பாட்டிலே
பாடினார் - குதித்தாடினார்
தீஞ்சுவைக் காவியமாய்க் கண்ணன் பாட்டினைத்
தீட்டினார் - இசை பூட்டினார்