பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

விடுதலை வீரர்கள் ஐவர்

கூவும் குயிலைப்போல் தாமும்பாட எண்ணிக்
கூவினார் - உளம் தாவினார்
காவிய மாய்க்குயிற் பாடலைக் கற்பனை
பண்ணினார் - புகழ் நண்ணினார்

பத்து வருடங்க ளாய்ப்புதுச் சேரியில்
பாரதி - தமிழ்ச்சாரதி
நத்திக் குடியிருந் தார்பின்னர் வேறிடம்
நாடினார் - புகல் தேடினார்.


நேரிசை வெண்பா


அன்று ,மலர்ந்த அரவிந்தக் கண்ணியர்கள்
சென்ற தெருத்தோறும் சீருடையில் - நின்றுலவும்
பொன்னக ரான புதுச்சேரி விட்டுப்பின்
சென்னைவந் தார்பா ரதி.


சந்த விருத்தம்


கொடுமுடி யெனவரும் அலைகளே
குமுறிடு குணகடற் கரையிலே
நெடுமலை பொடிபட் டதிரவே
நிலமிசை தாரகை யுதிரவே
படிமிசை எரிமலை குமுறவே
பகலவன் செந்தீ யுமிழவே
இடியெனப் பாடல்கள் பாடினார்
இடிந்தது பரங்கிய -ராட்சியே !