பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
௪. வ. வே. சு. ஐயர்
[அப்துர் ரகுமான்]

நாடும்பேர் உந்துதலால் அந்நாள் வீரர்
நாடுவிடு தலை செய்தார் ; நீயோ இந்நாள்
ஓடும் “போர் உந்து”விடு தலைச்செய் கின்ற
உரிமை பெற்றாய் ; ஆங்கிலரின் ஆட்சி தன்னைக்
கேடென்றே அகற்ற நின்றார் அவர்கள் ; நீயும்
கிள்ளியெறிந்தாய் அவர்தம் எழுத்தை; நம்மை
மூடிநின்ற ஆங்கிலத்தைப் போக்கடித்து
முத்தமிழ்க்கு வரவுரைத்த அமைச்சர் ஏறே;

***



கல் நினைவுக் கட்டிடங்கள் காலத்தால் சாயுமெனச்
சொல் நினைவுக் கட்டிடங்கள், சுடர்மிகுந்த வீரர்க்குக்
கட்டி வருக வெனக் கட்டளைகள் உரிமையுடன்
இட்டழைத்துப் பணிசெய்ய எமையழைத்த வானொலியே!
நாட்டுத் தளைகளைய் நாட்டமுற்ற தலைவர்களைப்
பாட்டுத் தளைகளுக்குள் பற்றிவந்த பாவலரே!
வீடுகளில் இருந்தபடி விடுதலைப்போர்க் காவியத்தின்
ஏடுகளைச் சுவைக்கின்ற இனியவரே! என் வணக்கம்

***



படுக்கவைக்கப் பட்டிருந்த நாடு - பகையின்
படைவுடைத்துக் கொண்டிருந்த காலம்
மடக்கி வைக்கப் பட்டிருந்த வீரம் - பொங்கி

மடைவுடைத்துக் கொண்டிருந்த நேரம்