பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. வே. சு. ஐயர்

41


“ஆரையா நீ”ரென்று தூண்டில் போட்டான்
அதற்கந்த திமிங்கலமா சிக்கும் ? “நான் தான்
வீரவிக்ரம் சிங்’கென்றார் ஐயர் ; ஒற்றன்
வீரசிங்கக் குரல் கேட்ட நரியாய் ஆனான்.

***



காயிதத்துப் புரட்சி செய்த பாரதியும்
அரவிந்தக் கலைஞர் தாமும்
ஆயுதத்துப் புரட்சி செய்த ஐயருடன்
அணி வகுத்தார் ; அலையின் ஈர
வாயுதத்தும் புதுச்சேரி தனைப் புரட்சிச்
சேரியென மாற்றி வைத்தார்
ஓயாத எரிமலையாய் உடையாத
கடலலையாய் உழைக்க லானார்.

***



பண்டுசெய்த பாரதப்போரார் அணிவகுப்பும்
நெப்போலியன் படைய மைப்பும்
கொண்டு செய்த புதுமுறையில் புரட்சிக்கோர்
நூல் தந்தார் ; குலையா நெஞ்சால்
தொண்டு செய்தார் ; நம் நலத்தைத் துண்டுசெய்த
அந்நியரைத் துளைப்ப தற்குக்
குண்டு செய்தார் ; ஆதிக்க ஆட்சியினை
வீரத்தால் குலையச் செய்தார்.

***



ரத்தம் பன்னீர். நமக்கு - பெறும்
ரணம்தானே ஆபரணம் - நாம்
உத்தம விடுதலைக்கே - எங்கள்
உயிரும் விலை தருவோம் - என